Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ‘ரெட் அலர்ட்’: முன்னாள் அமைச்சரின் எச்சரிக்கையும் திமுகவின் விமர்சனமும்!

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ‘ரெட் அலர்ட்’: முன்னாள் அமைச்சரின் எச்சரிக்கையும் திமுகவின் விமர்சனமும்!

-

- Advertisement -

தமிழகத்தின் பொருளாதாரம் மற்றும் தொழிற்துறை வளர்ச்சி குறித்து அண்மையில் வெளியிடப்பட்ட தரவுகள் மாநிலத்திற்கு ஒரு பெரும் சிவப்பு எச்சரிக்கையாக (Red Alert) மாறியுள்ளதாகத் திமுக செய்தித் தொடர்பு துணைத் தலைவர் ஆண்டாள் பிரியதர்சினி தெரிவித்துள்ளார். ‘லிபர்ட்டி தமிழ்’ ஊடகத்திற்கு வழங்கிய பிரத்யேக நேர்காணலில் அவர் இந்தக் கருத்துக்களை முன்வைத்துள்ளார்.தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ‘ரெட் அலர்ட்’: முன்னாள் அமைச்சரின் எச்சரிக்கையும் திமுகவின் விமர்சனமும்!

ஜிஎஸ்டி வருவாயில் சரிவு – சிவப்பு எச்சரிக்கை
முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஜிஎஸ்டி வருவாய் ரூ.1,03,900 கோடியிலிருந்து ரூ.1,01,890 கோடியாகக் குறைந்துள்ளது. இது மைனஸ் (-1) நிலையை நோக்கிச் செல்வது தமிழ்நாட்டின் பொருளாதாரத்திற்கு ஒரு பெரும் சருக்கல் என்றும், இது ஒட்டுமொத்த தமிழர்களுக்குமான அபாய மணி என்றும் ஆண்டாள் பிரியதர்சினி சுட்டிக்காட்டியுள்ளார்.

we-r-hiring

ஒரு லட்சம் கோடி முதலீடு – உண்மையாக பொய்யா?
புதிய அரசு பொறுப்பேற்ற முதல் மூன்று மாதங்களுக்குள்ளாகவே 100 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு, ஒரு லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகத் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா மற்றும் தவெக தரப்பினர் கூறிவருவது குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், “இந்தக் கணக்கீடுகள் உண்மையாக இருந்தால், அது பொருளாதாரத் தரவுகளில் பிரதிபலித்திருக்க வேண்டும். ஆனால், ஜிஎஸ்டி வருவாயும் பொருளாதார வளர்ச்சியும் சரிவை சந்தித்துள்ள நிலையில், இந்த ஒரு லட்சம் கோடி முதலீடு என்பது வெறும் பொய்க்கணக்கும் கட்டுக்கதையுமே ஆகும்” என கடுமையாக விமர்சித்துள்ளார்.தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ‘ரெட் அலர்ட்’: முன்னாள் அமைச்சரின் எச்சரிக்கையும் திமுகவின் விமர்சனமும்!

தொழில் நிறுவனங்கள் அண்டை மாநிலங்களுக்குப் படையெடுப்பு
ஆந்திரப் போன்ற அண்டை மாநிலங்கள் முதலீடுகளை ஈர்ப்பதில் மிகத் தீவிரமாகச் செயல்பட்டு வருவதாகவும், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கப்பல் கட்டும் தளம் உள்ளிட்ட பல திட்டங்களைக் காக்கிநாடாவிற்கு எடுத்துச் செல்வதில் தீவிரம் காட்டுவதையும் அவர் சுட்டிக் காட்டினார். ஆனால், தமிழக அரசோ அல்லது முதலமைச்சரோ இது குறித்து எவ்வித தொலைநோக்குப் பார்வையோடும் செயல்படவில்லை என்றும், பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டதன் மூலம் தமிழகத்தின் வேலைவாய்ப்புகளுக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் பேரிடி விழுந்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் குறித்து கேள்வி
முதலமைச்சர் விஜய் பிரிட்டன் பயணமாகத் தொழிலீர்ப்புக்காகச் செல்வதாகக் கூறப்படும் நிலையில், அத்தகைய பயணங்கள் குறித்த முறையான வெளிப்படைத்தன்மையோ அல்லது ஐடினரியோ (Itinerary) பொதுமக்களுக்கு வெளியிடப்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.

தமிழகத்தின் நலனுக்கான குரல்
திமுக எதிர்க்கட்சியாக இருந்தாலும், தமிழக மக்களின் நலன் மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் போதெல்லாம் ஆளுங்கட்சியின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவது தார்மீகக் கடமை என்று ஆண்டாள் பிரியதர்சினி தெரிவித்தார். மேலும், “ரியல்ஸ் (Reels) பார்ப்பது வேறு, நிஜ வாழ்க்கை (Real life) என்பது வேறு. விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பது போல, தவெக ஆட்சியின் பொருளாதார அணுகுமுறை தொடக்கத்திலேயே இந்தச் சரிவைச் சந்தித்துள்ளது” என்று அவர் தனது பேட்டியில் எச்சரித்துள்ளார்.

சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் பேச்சு: “நான் பதிலளிக்கும்போது யாரும் எழுந்து ஓடிவிடக்கூடாது” என்று வாக்குறுதி கேட்டார்!

MUST READ