சென்னை சட்டப்பேரவையில் நடைபெற்ற காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் ஆகிய துறைகளுக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், எடப்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்று தவெக அரசை கடுமையாகக் சாடினார்.


அவர் பேசிய உரையின் முக்கிய சிறப்பம்சங்கள்:
காவல்துறை மீது குற்றச்சாட்டு: விவசாயிகளின் பம்ப் செட்டுகளில் உள்ள காப்பர் வயர்கள் மற்றும் ஆடு, மாடு போன்ற கால்நடைகள் தொடர்ச்சியாகத் திருடப்பட்டு வருகின்றன. நிலக்கோட்டை தாலுகா, விளாம்பட்டி காவல் நிலையத்தில் இன்று காலை முதல் நூற்றுக்கணக்கான விவசாயிகள் புகார் அளிக்கச் சென்று அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர்.
போதை ஆசாமிகளால் தொடரும் திருட்டுகள்: போதைக்கு அடிமையான நபர்களால் பணம் கிடைக்காத சூழ்நிலையில் இதுபோன்ற திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
சொந்தத் தோட்டத்தில் திருட்டு: “எனது சொந்தத் தோட்டத்திலேயே மின்வயர்களை திருடிச் சென்றுவிட்டனர். எதிர்க்கட்சித் தலைவரான எனக்கே இப்படிப்பட்ட நிலைமை என்றால், சாதாரண மக்களுக்கு மாநிலத்தில் பாதுகாப்பு எப்படி இருக்கும்?” என்று புகைப்பட ஆதாரத்துடன் கேள்வி எழுப்பினார்.
விவசாயிகள் கொந்தளிப்பு: திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களின் நிலக்கோட்டை, வத்தலகுண்டு, சோழவந்தான், வாடிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தொடரும் இத்தகைய திருட்டுகளால் விவசாயிகள் மிகுந்த கொந்தளிப்பில் உள்ளனர்.
முதல்வர் விஜயின் புதிய அலுவலகம்! ₹5.54 கோடி திட்டம் ₹3.78 கோடிக்கு – வெளியான முக்கிய தகவல்
