Homeசெய்திகள்தமிழ்நாடுஊழல் செய்தவர்கள் தான் ஆதாரம் கேட்பார்கள்! – திமுக அரசைச் சாடி தவெக தலைவர் விஜய்...

ஊழல் செய்தவர்கள் தான் ஆதாரம் கேட்பார்கள்! – திமுக அரசைச் சாடி தவெக தலைவர் விஜய் அதிரடி!

-

- Advertisement -

ஊழல் குறித்துப் பேசினால் திசை திருப்பப் பார்க்கிறார்கள் – அரசியல் களத்தில் பரபரப்பைக் கிளப்பிய விஜய்!ஊழல் செய்தவர்கள் தான் ஆதாரம் கேட்பார்கள்! – திமுக அரசைச் சாடி தவெக தலைவர் விஜய் அதிரடி!

ஊழல் குறித்துக் கேள்வி எழுப்பினால், “நாங்கள் ஊழல் செய்யவே இல்லை” என்று கூறாமல் “ஆதாரம் கொடு” என்று திமுகவினர் கேட்பதாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடுமையாகச் சாடியுள்ளார்.

we-r-hiring

“ஊழல் செய்தவர்கள் தான் ஆதாரம் கேட்பார்கள்; தவறு செய்யாதவர்கள் அதைப் பொருட்படுத்த மாட்டார்கள்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

திமுகவின் மீதான காட்டமான விமர்சனம் பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், ஆளும்கட்சியான திமுகவின் செயல்பாடுகள் மற்றும் ஊழல் புகார்கள் குறித்துக் கடுமையாகப் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், “எதிர்க்கட்சிகளோ அல்லது பொதுமக்களோ ஊழல் குறித்துப் பேசத் தொடங்கினால், ‘நாங்கள் ஊழல் செய்யவில்லை’ என்று நேர்மையாகப் பதிலளிக்க திமுகவினருக்குத் தைரியம் இல்லை. அதற்குப் பதிலாக, ‘ஆதாரம் எங்கே?’ என்று கேட்டுத் தப்பிக்கப் பார்க்கிறார்கள்” எனக் குற்றம்சாட்டினார்.

ஆதாரம் கேட்பதே குற்ற உணர்ச்சி தான் மேலும் தொடர்ந்த அவர், “உண்மையிலேயே ஊழல் செய்யாதவர்கள் இதுபோன்ற குற்றச்சாட்டுகளைக் கண்டு கொள்ளாமல் கடந்து சென்றுவிடுவார்கள்.

ஆனால், தவறு மற்றும் ஊழல் செய்தவர்கள் மட்டுமே தங்களைக் காப்பாற்றிக் கொள்ள ‘ஆதாரம் கொடு’ என்று சாக்குபோக்கு சொல்வார்கள்” என்று சுட்டிக்காட்டினார்.

அரசியல் களத்தில் அதிகரிக்கும் காரசாரம் சமீபகாலமாக ஆளும்கட்சியின் நிர்வாகக் குளறுபடிகள் மற்றும் ஊழல் புகார்களை மையமாக வைத்துத் தவெக தலைவர் விஜய் தொடர்ந்து குரலெழுப்பி வருகிறார்.

தற்போது “ஆதாரம் கேட்பவர்கள் தான் ஊழல்வாதிகள்” என்று அவர் பேசியுள்ள கருத்து, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தையும் பரப்பரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

அவைத் தலைவர் பேச அனுமதி மறுப்பு: சட்டப்பேரவையிலிருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு!

MUST READ