Homeசெய்திகள்உலகம்ஏமன் சிறை மீது சவுதி வான்வழித் தாக்குதல்: பதிலடித் தாக்குதலில் 73 சவுதி குடிமக்கள் காயம்!

ஏமன் சிறை மீது சவுதி வான்வழித் தாக்குதல்: பதிலடித் தாக்குதலில் 73 சவுதி குடிமக்கள் காயம்!

-

- Advertisement -

ஏமனில் சவுதி அரேபியா நடத்திய விமானத் தாக்குதலில் 7 பேரும், சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய பதிலடித் தாக்குதலில் 73 பேரும் காயமடைந்துள்ளதாக இரு தரப்பிலிருந்தும் செய்திகள் வெளியாகியுள்ளன.

we-r-hiring

ஏமன் தலைநகர் சனா உள்ளிட்ட முக்கிய பகுதிகளை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இந்நிலையில், ஏமனின் ஜவுஃப் மாகாணத்தில் உள்ள அல் ஹசாம் நகர மத்திய சிறைச்சாலையின் மீது சவுதி அரேபியா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்ததாகவும், ஒரு பெண் உட்பட 7 பேர் பலத்த காயமடைந்ததாகவும் ஹவுதி சுகாதார அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனீஸ் அல் அஸ்பஹி தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்:

இதனிடையே, ஏமன் எல்லையை ஒட்டியுள்ள சவுதி அரேபியாவின் தெற்குப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் வாழும் இடங்கள் மற்றும் முக்கிய எரிசக்தி நிலையங்களைக் குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக சவுதி அரசு தெரிவித்துள்ளது.

சவுதி எரிசக்தி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

  • சவுதி அரேபியாவின் தெற்குப் பகுதிகளில் உள்ள பல எரிசக்தி தளங்கள் மீது ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.

  • குறிப்பாக அபா (Abha) சர்வதேச விமான நிலையம், கிங் காலித் விமான தளம் மற்றும் அபா, ஜஸான் ஆகிய இடங்களில் உள்ள ‘அராம்கோ’ (Aramco) நிறுவன கட்டிடங்கள் மீது இந்தத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

  • ஹவுதி கிளர்ச்சியாளர்களின் இந்த திடீர் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட பொதுமக்கள் மொத்தம் 73 பேர் காயமடைந்துள்ளனர்.

ஏமன் எல்லைப் பகுதியில் மீண்டும் வான்வழி மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளதால் அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

அமெரிக்கா–ஈரான் மோதல் மீண்டும் தீவிரம்! 5 எண்ணெய் டேங்கர்களை அழித்த அமெரிக்கா – பதிலடியில் ஏவுகணைகளை வீசிய ஈரான்

MUST READ