Homeசெய்திகள்தமிழ்நாடுஅரசு மருத்துவமனைகளில் பார்வையாளர்களுக்கு நேரக் கட்டுப்பாடு: பிளாஸ்டிக்ப பைகளில் உணவு எடுத்து வரவும் தடை –...

அரசு மருத்துவமனைகளில் பார்வையாளர்களுக்கு நேரக் கட்டுப்பாடு: பிளாஸ்டிக்ப பைகளில் உணவு எடுத்து வரவும் தடை – அமைச்சர் அருண்ராஜ் அதிரடி அறிவிப்பு!

-

- Advertisement -

தமிழக அரசு மருத்துவமனைகளின் பராமரிப்பு மற்றும் நோயாளிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் கே.ஜி. அருண்ராஜ் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளையும் முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளார்.அரசு மருத்துவமனைகளில் பார்வையாளர்களுக்கு நேரக் கட்டுப்பாடு: பிளாஸ்டிக்ப பைகளில் உணவு எடுத்து வரவும் தடை – அமைச்சர் அருண்ராஜ் அதிரடி அறிவிப்பு!

பார்வையாளர்களுக்கு நேரக் கட்டுப்பாடு:
அரசு மருத்துவமனைகளில் பார்வையாளர்களின் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த புதிய நடைமுறை அமல்படுத்தப்படுகிறது

we-r-hiring

மதியம்: 1:00 மணி முதல் 2:00 மணி வரை
மாலை: 4:00 மணி முதல் 6:00 மணி வரை

மேற்கண்ட குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே பார்வையாளர்கள் நோயாளிகளைச் சந்திக்க அனுமதிக்கப்படுவர்.

பிளாஸ்டிக் பைகளுக்கு அதிரடி தடை:
வெளிக்கடைகளில் இருந்து உணவுகளை வாங்கி வரும்போது பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்தக் கடுமையான தடை விதிக்கப்படுகிறது.

நோயாளிகளுக்கு வீடுகளில் இருந்து உணவு கொண்டு வருபவர்கள் கட்டாயம் பாத்திரங்களிலேயே எடுத்து வர வேண்டும்.

உயர்தர உணவு மற்றும் தூய்மை:
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்குத் தரமான மற்றும் சத்தான உணவு வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகள் அனைத்தும் தனியார் மருத்துவமனைகளின் தரத்திற்கும் மேலாகச் செயல்பட வேண்டும் என்பதே முதலமைச்சரின் முதன்மை எதிர்பார்ப்பாகும்.

பொதுமக்களுக்கு வேண்டுகோள்:
மருத்துவமனை கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மக்களிடம் இருந்து சில எதிர்ப்புகள் வந்தாலும், நோயாளிகளின் நலனைக் கருத்தில் கொண்டே இக்கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

முதலமைச்சரின் இந்த உயரிய நோக்கத்தை நிறைவேற்ற பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என அமைச்சர் அருண்ராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.

இடைத்தேர்தல் வியூகம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இல்லத்தில் அவசர ஆலோசனை!

MUST READ