Homeசெய்திகள்தமிழ்நாடுவிஜய்க்கு என்னாச்சு? முடிவெடுக்க முடியாமல் திணறுகிறாரா? 'பேரலை' மில்டன் உடைத்த பகீர் உண்மை!

விஜய்க்கு என்னாச்சு? முடிவெடுக்க முடியாமல் திணறுகிறாரா? ‘பேரலை’ மில்டன் உடைத்த பகீர் உண்மை!

-

- Advertisement -

தமிழக அரசியல் களம் மற்றும் தமிழக வெற்றித் கழகத் தலைவர் விஜய்யின் உள்வட்டார நிர்வாக நகர்வுகள் குறித்துப் பல திடுக்கிடும் தகவல்களை மூத்த பத்திரிகையாளர் மில்டன் பகிர்ந்துள்ளார்.விஜய்க்கு என்னாச்சு? முடிவெடுக்க முடியாமல் திணறுகிறாரா? 'பேரலை' மில்டன் உடைத்த பகீர் உண்மை!

விஜய்யைச் சுற்றி இயங்கி வரும் அதிகார மையங்கள் (Power Lobby) மற்றும் அவர்களுக்கு இடையேயான ஆதிக்கம் குறித்து அவர் தெரிவித்த தகவல்களின் விரிவான செய்தித் தொகுப்பு.

we-r-hiring

விஜய்யைச் சூழ்ந்துள்ளபவர் லாபி
பத்திரிகையாளர் மில்டன் தனது பேட்டியில், தவெக தலைவர் விஜய்யின் அரசியல் முடிவுகள் மற்றும் கட்சி நிர்வாகத்தில் வெளிப்புற நபர்களின் தலையீடு அதிகரித்து வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். குறிப்பாக, ஆந்திராவை பின்னணியாகக் கொண்ட விஷ்ணு ரெட்டி (Vishnu Reddy), தேர்தல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி (John Arokiasamy) மற்றும் கீர்த்தனா உள்ளிட்ட நபர்களின் பெயர்களைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், இவர்கள் விஜய் வட்டாரத்திலும் அவரது அறை வரை சென்று நிர்வாக முடிவுகளைத் தீர்மானிப்பதிலும் எந்த அளவுக்கு ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள் என்பதை விரிவாக விவரித்துள்ளார்.விஜய்க்கு என்னாச்சு? முடிவெடுக்க முடியாமல் திணறுகிறாரா? 'பேரலை' மில்டன் உடைத்த பகீர் உண்மை!

விஷ்ணு ரெட்டி யார்? ஆந்திரா முதல் சென்னை வரை
ஆந்திராவைச் சேர்ந்த விஷ்ணு ரெட்டி என்பவரின் பின்னணி என்ன, அவர் எவ்வாறு தமிழக அரசியல் சூழலுக்குள் நுழைந்து நேரடியாக விஜய்யின் நம்பிக்கையைப் பெற்ற நிலைக்கு உயர்ந்தார் என்பது குறித்தும் மில்டன் விளக்கியுள்ளார். விஜய்யைச் சந்திக்க விரும்புபவர்கள் மற்றும் கட்சித் தலைமைக்குத் தகவல்களைக் கொண்டு சேர்க்க வேண்டியவர்கள் இந்த ‘லாபி’ நபர்களின் வழியே செல்ல வேண்டிய சூழல் உள்ளதாகவும், இதனால் முக்கிய நிர்வாக முடிவுகள் ஆந்திர பின்னணி கொண்ட நபர் மற்றும் குறிப்பிட்ட சிலர் மூலமாகவே நகர்த்தப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

சுற்றி வளைக்கும் அதிகாரிகள்: திணறும் தவெக தலைவர்?
கட்சியின் அடிமட்ட கள நிலவரங்களும், தொண்டர்கள் மற்றும் மக்களின் உண்மையான எண்ண ஓட்டங்களும் விஜய்க்கு நேரடியாகச் சென்றடையாதவாறு ஒரு கட்டுப்பாட்டு வட்டம் (Cordon) உருவாக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய மில்டன், இதனால் சரியான தகவல்கள் கிடைக்காமல் எந்த முடிவை எடுப்பது என்று தெரியாமல் விஜய் திணறும் சூழல் நிலவுவதாகத் தெரிவித்துள்ளார். ஒரு புறம் மக்கள் ஆதரவும், மறுபுறம் உள்கட்சி அழுத்தங்களும் இருக்கும் வேளையில், இந்த ‘லாபி’யின் பிடியில் கட்சி நிர்வாகம் சென்று கொண்டிருப்பது தவெக-வின் எதிர்கால அரசியல் நகர்வுகளுக்குப் பெரும் சவாலாக அமையும் என்றும் பத்திரிகையாளர் மில்டன் எச்சரித்துள்ளார்.

அதிமுகவிற்கு ஆதரவு கோரி புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்துடன் முன்னாள் அமைச்சர்கள் தீவிர ஆலோசனை!

MUST READ