Homeசெய்திகள்தமிழ்நாடுதூத்துக்குடியில் பரபரப்பு: ‘தனியார் பல்கலைக்கழக திருத்த மசோதாவைத் திரும்ப பெறுக!’ - இந்திய மாணவர் சங்கம்...

தூத்துக்குடியில் பரபரப்பு: ‘தனியார் பல்கலைக்கழக திருத்த மசோதாவைத் திரும்ப பெறுக!’ – இந்திய மாணவர் சங்கம் சட்ட நகல் எரிப்புப் போராட்டம்!

-

- Advertisement -

வ.உ.சி கல்லூரி முன்பாக மாணவர்கள் வீரியமிக்க போராட்டம்; மசோதாவைத் திரும்பப் பெறாவிட்டால் போராட்டம் தீவிரமடையும் என எச்சரிக்கை.தூத்துக்குடியில் பரபரப்பு: ‘தனியார் பல்கலைக்கழக திருத்த மசோதாவைத் திரும்ப பெறுக!’ - இந்திய மாணவர் சங்கம் சட்ட நகல் எரிப்புப் போராட்டம்!

உயர் கல்வியைத் தனியாரிடம் ஒப்படைக்கும் வகையிலான ‘தனியார் பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதாவை’ உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்தி, தூத்துக்குடியில் இந்திய மாணவர் சங்கம் (SFI) சார்பில் சட்ட நகல் எரிப்புப் போராட்டம் நடைபெற்றது.

we-r-hiring

அவசரகதியில் சட்ட மசோதா நிறைவேற்றம்:
தமிழகச் சட்டமன்றக் கூட்டத் தொடரின் நிறைவு நாளில், தனியார் பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா அவசரகதியில் நிறைவேற்றப்பட்டதாகக் கூறி பல்வேறு அரசியல் அமைப்புகளும் மாணவர் அமைப்புகளும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.

உயர்கல்வித் துறையைத் தனியார்மயமாக்கும் இச்சட்டத்தை எதிர்த்து மாநில தழுவிய அளவில் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

வ.உ.சி கல்லூரி முன் ஆர்ப்பாட்டம்:
இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி வ.உ.சி. (V.O.C) கல்லூரி முன்பாக இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் சட்ட நகல் எரிப்புப் போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ராம்குமார் தலைமை தாங்கினார்.

இதில் திரளான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு, அரசுக்கு எதிரான கண்டன முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து, புதிய சட்ட மசோதாவின் நகல்களை நடுரோட்டில் கொளுத்தித் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

தொடர் போராட்ட எச்சரிக்கை:
ஏழை மற்றும் எளிய சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களின் உயர்கல்விக் கனவைப் பறிக்கும் வகையில் அமைந்துள்ள இந்தச் சட்ட மசோதாவைத் தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.

இல்லையெனில், மாநிலம் தழுவிய அளவில் மாணவர்களைத் திரட்டித் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம் எனப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் எச்சரித்துள்ளனர்.

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை: விண்ணை முட்டும் விமானக் கட்டணம் – அதிர்ச்சியில் பயணிகள்!

MUST READ