Homeசெய்திகள்தமிழ்நாடுதிருப்பதி பிரம்மோற்சவம்: தமிழகத்தில் இருந்து தினமும் 150 சிறப்பு பேருந்துகள்! செப்.30 வரை இயக்கம்

திருப்பதி பிரம்மோற்சவம்: தமிழகத்தில் இருந்து தினமும் 150 சிறப்பு பேருந்துகள்! செப்.30 வரை இயக்கம்

-

- Advertisement -

திருப்பதி திருமலையில் நடைபெறும் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, தமிழகத்தில் இருந்து திருப்பதிக்கு தினமும் 150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்த சிறப்பு பேருந்துகள் நாளை முதல் செப்டம்பர் 30-ம் தேதி வரை இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

we-r-hiring

19 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சென்னை, திருச்சி, தஞ்சாவூர், சேலம், கோயம்புத்தூர், மதுரை, காரைக்குடி, கும்பகோணம், நாகப்பட்டினம், செங்கோட்டை, புதுச்சேரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், தாம்பரம், கிருஷ்ணகிரி, தருமபுரி, அரூர் மற்றும் ஓசூர் ஆகிய இடங்களில் இருந்து திருப்பதிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

அதேபோல், திருப்பதியில் இருந்து மேற்கண்ட பகுதிகளுக்கும் இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் தேவைக்கு ஏற்ப தினமும் 150 பேருந்துகள் இயக்கப்படும்.

முன்பதிவு வசதி ஏற்பாடு

திருச்சி, தஞ்சாவூர், சேலம், கோயம்புத்தூர், மதுரை, காரைக்குடி, கும்பகோணம், நாகப்பட்டினம், செங்கோட்டை மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்து இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளுக்கு முன்பதிவு வசதி செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

திருப்பதி செல்ல விரும்பும் பக்தர்கள் TNSTC இணையதளம் மற்றும் TNSTC செயலி மூலம் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ளலாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கூடுதல் ஏற்பாடு

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா நடைபெற்று வரும் நிலையில், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருப்பதி செல்ல உள்ளனர்.

பக்தர்களின் போக்குவரத்து தேவையை கருத்தில் கொண்டு தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதனால் திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு பயண வசதி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

UPI கட்டண முறையை ரத்து செய்க! மு.வீரபாண்டியன் கடும் கண்டனம்!

MUST READ