Homeசெய்திகள்தமிழ்நாடுஅதிகளவு டீ, காபி அருந்துவோர்களின் கவனத்திற்கு! - மருத்துவர்களின் அறிவுறுத்தல்!

அதிகளவு டீ, காபி அருந்துவோர்களின் கவனத்திற்கு! – மருத்துவர்களின் அறிவுறுத்தல்!

-

- Advertisement -

 

அதிகளவு டீ, காபி அருந்துவோர்களின் கவனத்திற்கு! - மருத்துவர்களின் அறிவுறுத்தல்!
File Photo

பணிபுரியும் இடமாக இருந்தாலும் சரி, வீடாக இருந்தாலும் சரி (அல்லது) வெளியே சுற்றினாலும் சரி சற்றுப் புத்துணர்வு தேவைப்பட்டால் அனைவரும் தேடுவது டீ கடையைத் தான். டீ மற்றும் காபி அருந்துவது பலரின் அன்றாட பழக்கமாகவும், பொழுதுப்போக்காகவும் உள்ளது.

we-r-hiring

அசோக் செல்வன், சரத்குமார் கூட்டணியின் திரில்லர்… இன்று வெளியாகும் முக்கிய அப்டேட்!

குறிப்பிட்ட நேரம் வந்துவிட்டால், அந்த நேரத்தில் டீ அல்லது காபியைக் குடித்தால் மட்டுமே அடுத்த பணிக்கு செல்ல முடியும் என்ற மனநிலையிலும் சிலர் இருக்கின்றனர்.

இது குறித்து டீ கடையின் உரிமையாளர்கள் கூறுகையில், தினமும் ஐந்து முதல் ஏழு டீ வரை அருந்தும் வாடிக்கையாளர்கள் உள்ளதாகவும், தற்போது கோடைக்காலம் தொடங்கியுள்ளதாக அவர்கள் டீ அருந்துவதைக் குறைத்துக் கொண்டதாகவும் தெரிவிக்கின்றன.

வெயில் காலத்தில் அதிகளவு தண்ணீர் அருந்த வேண்டும் என்பது அவசியம். ஆனால் ஒரு சிலர் டீ (அல்லது) காபியை அதிகம் அருந்துகின்றனர். இந்த இரண்டிலும் உள்ள கஃபை மூளையைத் தூண்டி விடவும், புத்துணர்வையும் தருமே தவிர சத்துகளை அளிக்காதது என்று கூறுகின்றனர் மருத்துவர்கள்.

நேரடியாக ஓடிடி-யில் ரிலீஸ் ஆகும் விஷ்ணு விஷாலின் புதிய படம்!?

பக்கவிளைவுகளை உணராமல் அதிக அளவு அருந்தும் டீ பிரியர்கள். அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்பதை டீ பிரியர்கள் உணர்ந்து, தினமும் இரண்டு டீ அல்லது காபியை அருந்துவது நல்லது என்கின்றனர் மருத்துவர்கள்.

MUST READ