தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. தவெக, திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களின் மனுக்கள் பரிசீலனைக்குப் பிறகு ஏற்கப்பட்டன.


5 முனைப் போட்டி
தாராபுரம் இடைத்தேர்தலில் தற்போது தவெக, திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய 5 கட்சிகளின் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
தவெக சார்பில் சத்யபாமா, திமுக சார்பில் சுகன்யா, அதிமுக சார்பில் பானுமதி, நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் லட்சுமணன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
99 பேர் வேட்புமனு தாக்கல்
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 99 பேர் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களின் மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன.
தாராபுரம் தொகுதியில் முக்கிய கட்சிகளின் 5 வேட்பாளர்களின் மனுக்களும் ஏற்கப்பட்டுள்ளன.
செப்.19-ல் இறுதி வேட்பாளர் பட்டியல்
வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் செப்டம்பர் 19 என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினமே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இதன் பின்னர் தேர்தல் பிரசாரம் மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அக்டோபர் 6-ல் வாக்குப்பதிவு
தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இரண்டு தொகுதிகளிலும் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
தேர்தல் களத்தில் முக்கிய கட்சிகளின் தலைவர்கள் மற்றும் முன்னணி நிர்வாகிகள் அடுத்த வாரம் முதல் நேரடியாக பிரசாரம் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
“மின்வெட்டே இல்லைன்னா, எதற்காக வெளிச்சந்தையில் வாங்கணும்?” – எடப்பாடி பழனிசாமி ஆவேசக் கேள்வி!
