கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியதாக வந்த புகாரைத் தொடர்ந்து நடவடிக்கை
பாரதிய ஜனதா கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து கருப்பு முருகானந்தம் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

நடவடிக்கைக்கான பின்னணி
பாஜக மாநிலப் பொதுச்செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்த கருப்பு முருகானந்தம் மீது, தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியதாக அண்மையில் புகார் ஒன்று அளிக்கப்பட்டது.
இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாகக் கூறி, அவர் வகித்து வந்த மாநிலப் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்தும், கட்சியின் அடிப்படைப் பொறுப்புகளில் இருந்தும் அவர்
உடனடியாக நீக்கப்பட்டுள்ளதாகக் கட்சித் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்களின் புகாரைத் தொடர்ந்து பாஜக தலைமை எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“வீ தி லீடர்ஸ்” இயக்கத்தின் அமைப்புச் பொதுச் செயலராக கரு.நாகராஜன் நியமனம்: அண்ணாமலை அறிவிப்பு!
