Homeசெய்திகள்தமிழ்நாடுவார விடுமுறை நாட்களில் பயணிகளுக்கு குட் நியூஸ்! 2,655 சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கம்

வார விடுமுறை நாட்களில் பயணிகளுக்கு குட் நியூஸ்! 2,655 சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கம்

-

- Advertisement -

வார விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக தமிழகம் முழுவதும் இன்று முதல் 2,655 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

we-r-hiring

வார விடுமுறை நாட்களில் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கும், பல்வேறு நகரங்களில் இருந்து சென்னை உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கும் பயணிகள் அதிகளவில் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு, வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

கிளாம்பாக்கத்தில் இருந்து கூடுதல் பேருந்துகள்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட நகரங்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை 760 சிறப்பு பேருந்துகளும், சனிக்கிழமை 520 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.

கோயம்பேட்டில் இருந்து 115 சிறப்பு பேருந்துகள்

சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர் மற்றும் பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கு வெள்ளிக்கிழமை 115 சிறப்பு பேருந்துகளும், சனிக்கிழமை மேலும் 115 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மாதவரத்தில் இருந்து கூடுதல் சேவை

மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், வேலூர், ஓசூர் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட இடங்களுக்கு வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் தலா 70 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

மேலும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் உள்ளிட்ட நகரங்களில் இருந்தும் பல்வேறு பகுதிகளுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

ஞாயிற்றுக்கிழமை 805 சிறப்பு பேருந்துகள்

வார விடுமுறையை முடித்து சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்பும் பயணிகளின் வசதிக்காக ஞாயிற்றுக்கிழமை பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து முக்கிய இடங்களிலிருந்தும் 805 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

முன்பதிவு செய்த பயணிகள் எண்ணிக்கை

வார விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்ல ஏற்கனவே வெள்ளிக்கிழமை 7,812 பயணிகளும், சனிக்கிழமை 4,001 பயணிகளும், ஞாயிற்றுக்கிழமை 8,946 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

சிறப்பு பேருந்து இயக்கத்தை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை எய்ம்ஸில் முக்கிய அறிவிப்பு! ஜனவரி 1 முதல் முழுமையான OPD சேவை – மத்திய அரசு தகவல்

MUST READ