Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழ்நாடு முழுவதும் தொடரும் மின்வெட்டு: இரவில் வீதிகளில் இறங்கி பொதுமக்கள் திடீர் போராட்டம்!

தமிழ்நாடு முழுவதும் தொடரும் மின்வெட்டு: இரவில் வீதிகளில் இறங்கி பொதுமக்கள் திடீர் போராட்டம்!

-

- Advertisement -

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நிலவிவரும் தொடர் மின்வெட்டுப் பிரச்சினையைக் கண்டித்து, தலைநகர் சென்னை ராயபுரம் மற்றும் ஆவடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் சாலை மறியல் மற்றும் மின்வாரிய அலுவலகங்களை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.தமிழ்நாடு முழுவதும் தொடரும் மின்வெட்டு: இரவில் வீதிகளில் இறங்கி பொதுமக்கள் திடீர் போராட்டம்!

ராயபுரத்தில் நள்ளிரவில் திடீர் சாலை மறியல்
சென்னை ராயபுரம் தொகுதிக்குட்பட்ட வண்ணாரப்பேட்டை போஜராஜன் நகர், சஜாம் முனுசாமி தெரு மற்றும் டி.பி.கே. தெரு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாகத் தொடர் மின்வெட்டு வாடிக்கையாகி வரும் நிலையில், நேற்று மாலையில் திடீரெனத் துண்டிக்கப்பட்ட மின்சாரம் நள்ளிரவு 1 மணி வரை வராததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் கண்ணன் ரவுண்டானா அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

we-r-hiring

மின்சாரம் இல்லாததால் வீடுகளில் குடிநீர் மோட்டார் இயங்காமல் கடுமையான குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டதாகவும், கடும் உஷ்ணம் மற்றும் புழுக்கத்தால் முதியவர்களும் கைக்குழந்தைகளும் தூங்க முடியாமல் அவதிப்பட்டதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். மேலும், இந்தத் தொடர் மின்வெட்டைக் கண்டித்தும், ராயபுரம் தொகுதி எம்.எல்.ஏ. விஜய் தாமு மற்றும் ஆளுங்கட்சியின் மெத்தனப் போக்கைக் கண்டித்தும் அவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனிடையே, தகவலறிந்து விரைந்து வந்த வண்ணாரப்பேட்டை போலீசார் பொதுமக்களிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி, மின்சாரம் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து, பொதுமக்கள் சிறிது நேரத்திற்குப் பிறகு போராட்டத்தைக் கைவிட்டனர்.தமிழ்நாடு முழுவதும் தொடரும் மின்வெட்டு: இரவில் வீதிகளில் இறங்கி பொதுமக்கள் திடீர் போராட்டம்!

ஆவடியில் மின்வாரிய அலுவலகம் முற்றுகை
இதேபோல், புறநகர்ப் பகுதியான ஆவடியிலும் மின்வெட்டுப் பிரச்சினை உச்சத்தை எட்டியுள்ளது. ஸ்ரீபெரும்புதூரில் இருந்து சென்னை புறநகர்ப் பகுதிகளுக்கு வரும் பிரதான மின் பாதையில் ஏற்பட்ட திடீர் துண்டிப்பு காரணமாக, ஆவடி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் கடுமையான மின் தடை ஏற்பட்டது. பருத்திப்பட்டு ஹவுசிங் போர்டு உள்ளிட்ட முக்கிய குடியிருப்புப் பகுதிகளில் 2 மணி நேரத்திற்கும் மேலாக மின் விநியோகம் முற்றிலுமாகத் தடைபட்டது. இதனால் மின்வாரியத்தின் தொடர்ச்சியான மெத்தனப் போக்கைக் கண்டித்துத் திரளான பொதுமக்கள் ஆவடி மின்வாரிய அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், ஆவடி காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின் மின் இணைப்பு வழங்கப்பட்டதை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். ஆவடி பகுதியில் இந்த மாதத்தில் மட்டும் மின்வெட்டைக் கண்டித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவது இது 4-வது முறை என்பது குறிப்பிடத்தக்கது.தமிழ்நாடு முழுவதும் தொடரும் மின்வெட்டு: இரவில் வீதிகளில் இறங்கி பொதுமக்கள் திடீர் போராட்டம்!

மாநிலம் முழுவதும் எதிரொலிக்கும் மின்தடை பிரச்சினை
ராயபுரம் மற்றும் ஆவடி மட்டுமின்றி, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும் இரவு நேரங்களில் மின்வெட்டுப் பிரச்சினை தீவிரமடைந்து வருகிறது. தூக்கத்தைத் துறந்து நடு இரவில் பொதுமக்கள் வீதிகளில் இறங்கி மின்வாரிய அலுவலகங்களை முற்றுகையிடும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன.

இன்னும் கோடை காலம் முழுமையாகத் தொடங்கும் முன்பே மின் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால், அரசு உடனடியாக இதில் தலையிட்டுத் தகுந்த தீர்வு காண வேண்டும் என்பதே அனைத்துத் தரப்பு மக்களின் ஒட்டுமொத்தக் கோரிக்கையாக உள்ளது. அடிப்படைத் தேவைகளில் ஒன்றான மின் விநியோகம் தொடர்ச்சியாகத் தடைபடுவதும், அதனைச் சரிசெய்யக் கோரி பொதுமக்கள் நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபடுவதும் உள்ளாட்சி மற்றும் மின்துறை நிர்வாகத்தின் தொய்வை வெளிக்காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

வார விடுமுறை நாட்களில் பயணிகளுக்கு குட் நியூஸ்! 2,655 சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கம்

MUST READ