Homeசெய்திகள்சினிமா“இந்த சமூகம் தனக்கு கொடுத்துள்ள பொறுப்பை அன்போடு திருப்பிக் கொடுக்க விரும்புகிறேன்” – பா.ரஞ்சித்

“இந்த சமூகம் தனக்கு கொடுத்துள்ள பொறுப்பை அன்போடு திருப்பிக் கொடுக்க விரும்புகிறேன்” – பா.ரஞ்சித்

-

- Advertisement -

திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித், “இந்த சமூகம் தனக்கு கொடுத்துள்ள ஒரு பொறுப்பை அன்போடு திருப்பிக் கொடுக்க விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

we-r-hiring

பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வேட்டுவம்’ திரைப்படத்தின் அறிமுக நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய இயக்குநர் பா.ரஞ்சித், திரைப்படத்தின் கதைக்களம் மற்றும் தனது சினிமா பயணம் குறித்து பேசினார்.

மனித இனம் தோன்றியபோது ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாக இருந்தவர்கள், காலப்போக்கில் சமூகச் சிக்கல்களுக்கும் பாகுபாடுகளுக்கும் இலக்காகி ஏற்றத்தாழ்வுகள் உருவாகியுள்ளதாக தெரிவித்த அவர், அனைவரையும் மீண்டும் ஒன்றிணைப்பதற்கான முயற்சியாக ‘வேட்டுவம்’ படத்தை எடுத்துள்ளதாக கூறினார்.

நன்றாக நடிக்கத் தெரிந்த கலைஞர்களிடம் வேலை வாங்குவது மிகவும் எளிது என்றும், அவர்கள் தன்னுடைய வேலையை எளிமையாக்கி விடுவார்கள் என்றும் பேசிய பா.ரஞ்சித், முதல் முறையாக தன்னைத் திரையில் பார்த்தபோது மகிழ்ச்சியாக இருந்தது என்றார்.

நடிப்பதைவிட தனக்கு நிறைய வேலைகள் உள்ளதாக கூறிய அவர், அதை நோக்கியே சென்று கொண்டிருப்பதாக குறிப்பிட்டார்.

இந்த சமூகம் தனக்கு ஒரு பொறுப்பைக் கொடுத்துள்ளதாகவும், அதை அவர்களுக்கு அன்பாகத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்பதற்காக சிந்தித்து, சிறப்பான படைப்புகளை உருவாக்க வேண்டும் என நினைப்பதாகவும் ரஞ்சித் தெரிவித்தார்.

“ரஞ்சித் படம் என்றாலே ஒரு எனர்ஜிதான்” – நடிகர் ஆர்யா

“ரஞ்சித் படம் என்றாலே ஒரு எனர்ஜிதான்” என்றும், இந்திய அளவில் மிகச் சிறந்த முக்கியமான இயக்குநராக ரஞ்சித் இருந்தும் அவரிடம் எப்போதுமே ஈகோ இருக்காது என்றும் நடிகர் ஆர்யா தெரிவித்தார்.

‘தங்கலான்’ திரைப்படம் நிறைய மக்களைச் சென்றடையவில்லை என வருத்தப்பட்ட ரஞ்சித், அந்தத் தவறு ‘வேட்டுவம்’ படத்தில் வந்துவிடக் கூடாது என்று கூறியதையும், இந்தப் படத்துக்காக கூடுதல் உழைப்பை ரஞ்சித் கொடுத்துள்ளதாகவும் ஆர்யா கூறினார்.

‘சார்பட்டா 2’ படம் குறித்து பேசச் சென்றபோதுதான், தனக்கு ‘வேட்டுவம்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது என நடிகர் ஆர்யா தெரிவித்தார்.

“ரஞ்சித் வருகைக்கு முன், பின் என தமிழ் சினிமாவை இரண்டாகப் பிரிக்கலாம்” – அருண் மாதேஸ்வரன்

இயக்குநர் ரஞ்சித் தங்களுக்கே முன்னோடி என்று புகழ்ந்த இயக்குநர் அருண் மாதேஸ்வரன், ரஞ்சித் போட்டுக் கொடுத்த பாதையில்தான் தங்களது பயணம் உள்ளதாக குறிப்பிட்டார்.

ரஞ்சித் வருகைக்கு முன், வருகைக்குப் பின் என தமிழ் சினிமாவை இரண்டாகப் பிரிக்கலாம் என்று அருண் மாதேஸ்வரன் கூறினார்.

‘வேட்டுவம்’ கதையை தன்னிடம் கூறியபோது, இதை எப்படி உருவாக்க முடியும் என நினைத்ததாகவும், ஆனால் ரஞ்சித் அதை மிகவும் சரியாகச் செய்திருக்கிறார் என்றும் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் தெரிவித்தார்.

மூன்று கால அரசியலைப் பேசும் பா.ரஞ்சித்தின் ‘வேட்டுவம்’: மிரட்டலான அறிமுக வீடியோவுடன் டிசம்பரில் வெளியீடு!

MUST READ