Homeசெய்திகள்சினிமாமன்டாடி திரைப்படத்தை மதுரையில் ரசிகர்களுடன் பார்த்த நடிகர் சூரி பேட்டி!

மன்டாடி திரைப்படத்தை மதுரையில் ரசிகர்களுடன் பார்த்த நடிகர் சூரி பேட்டி!

-

- Advertisement -

மன்டாடி திரைப்படம் வெளியான நாளிலிருந்து இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. மதுரையில் ரசிகர்களுடன் இணைந்து திரைப்படத்தை பார்த்த நடிகர் சூரி, தனது சினிமா பயணம், மன்டாடி திரைப்படத்தின் வரவேற்பு மற்றும் அடுத்தடுத்த படங்கள் குறித்து பேசினார்.

we-r-hiring

தெலுங்கு சினிமாவில் முக்கியமான ஹீரோவாக இருக்கும் சுகாஷ், மன்டாடி படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மதுரை மக்களுக்கு மிக்க நன்றி. மன்டாடி படம் திரைக்கு வந்த நாளிலிருந்து இப்போது வரை ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக சென்று கொண்டிருக்கிறது. ஒரு வருட கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி இது என்று சூரி தெரிவித்தார்.

“புரோட்டா சூரி என்று ஒன்று இல்லவே இல்லை. சூரி தான் என் பெயர். நகைச்சுவை நடிகனாக இருந்து கதை நாயகனாக மாறி, இப்போது கதாநாயகனாக மாறி உள்ளேன். மக்கள் தான் என்னை இந்த இடத்திற்கு கொண்டு வந்துள்ளனர். என் கையைப் பிடித்து கூட்டி வந்த என்னுடைய அத்தனை இயக்குநர்களுக்கும் நன்றி” என்று சூரி கூறினார்.

‘அயலான்’ திரைப்படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளதாகவும் சூரி தெரிவித்தார்.

முழுமையான ஒரு மதுரை சார்ந்த கதையில் நடிக்க வேண்டும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றேன். விரைவில் அதில் நடிப்பேன் என்றும் அவர் கூறினார்.

தனது சினிமா வாழ்க்கையில் முக்கியமான படமாக மன்டாடி அமைந்துள்ளதாகவும் சூரி மகிழ்ச்சி தெரிவித்தார்.

இந்தப் படத்தை திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், மக்கள் என அனைவரும் பாராட்டுகிறார்கள். அவர்களை திருப்திப்படுத்தினாலே போதும் என்றும் சூரி தெரிவித்தார்.

படப்பிடிப்பின்போது ஏற்பட்ட காயங்கள் குறித்துப் பேசிய சூரி, கடலில் கீழே விழுந்தது, கப்பலில் இருந்து கீழே விழுந்தது என பல காட்சிகளில் நடித்ததாகவும், அது மிகவும் வலியாக இருந்ததாகவும் கூறினார்.

படப்பிடிப்பில் பல அடிகள் விழுந்துள்ளன. “இது நேத்து கீழே விழுந்தது, இது முந்தா நேத்து கீழே விழுந்தது என படப்பிடிப்பில் ஏற்பட்ட அடிகளை ஜெராக்ஸ் எடுத்து தான் பார்க்க வேண்டும்” என்று கூறும் அளவுக்கு பல காயங்கள் ஏற்பட்டதாகவும், ஆனால் அந்த வலி அனைத்தும் படம் வெளியான பிறகு மகிழ்ச்சியாக மாறியதாகவும் சூரி தெரிவித்தார்.

இவ்வளவு பெரிய ஸ்டாரின் மகன் என்ற சின்ன விஷயத்தைக்கூட சஞ்சய் தம்பியிடம் பார்க்க முடியாது. சஞ்சய் தம்பியிடம் அவ்வளவு தெளிவு, பணிவு, நிதானம் இருக்கிறது. கண்டிப்பாக அவர் எதிர்காலத்தில் மிகப்பெரிய இடத்திற்கு வருவார். அவர் சொன்னது போல எதிர்காலத்தில் அவருடன் கண்டிப்பாக ஒரு படம் பண்ணலாம் என்றும் சூரி கூறினார்.

ஒரு நடிகனுக்கு கிடைக்கும் பெரிய விருது என்றால் அது ரஜினி சாரிடம் வாழ்த்து வாங்குவது. ‘விடுதலை’ படத்தை பார்த்து ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தார். தற்போது மன்டாடி திரைப்படத்தை பார்த்தும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது மிகப்பெரிய மகிழ்ச்சி என்று சூரி தெரிவித்தார்.

“இந்த டிரஸ், அந்த டிரஸ் எல்லாம் இல்லை. நான் எப்பவும் மனிதன் தான். சூரிக்கு எந்த டிரஸ் போட்டாலும் மகிழ்ச்சியாக இருப்பான்” என்றும் சூரி கூறினார்.

‘சண்டக்காரி’ திரைவிமர்சனம்: விமல் – ஸ்ரேயா கூட்டணி எப்படி? – ஜாலி, ஸ்டைலுடன் பயணிக்கும் கதை!

MUST READ