Homeசெய்திகள்மாவட்டம்மதுராந்தகம் இடைத்தேர்தல்: மரகதம் குமரவேல்–புஸ்சி ஆனந்த் பிரச்சாரத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு

மதுராந்தகம் இடைத்தேர்தல்: மரகதம் குமரவேல்–புஸ்சி ஆனந்த் பிரச்சாரத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு

-

- Advertisement -

மதுராந்தகம் அருகே தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் ஆதரித்து வாக்கு சேகரிக்க சென்ற அமைச்சர் புஸ்சி ஆனந்துக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பிரச்சாரத்தை ரத்து செய்து வெளியேறினர்

we-r-hiring

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தனி சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ள சூழலில் தமிழக வெற்றி கழகம் வேட்பாளர் மரகதம் குமரவேல் அச்சரப்பாக்கம் வடக்கு ஒன்றியத்துக்குட்பட்ட நேமம், அத்திவாக்கம், பகுதியில் அமைச்சர் புஸ்சி ஆனந்துடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அங்கு இருந்த பொதுமக்கள் பணத்திற்காக கட்சி மாறி சென்றுவிட்டு மீண்டும் வாக்கு கேட்க வருவது எந்த விதத்தில் நியாயம் வேட்பாளர் தானே எம்.எல்.ஏ வா என கேள்வி எழுப்பு எங்கள் கிராமத்தை விட்டு வெளியேறு துரோகி துரோகி என கோஷங்கள் எழுப்பி கருப்புக் கொடி ஏந்தி பிரச்சாரத்தை நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது போலீசாருக்கும் பொது மக்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் நிலைமையை உணர்ந்த வேட்பாளர் பிரச்சாரத்தை நிறுத்தி விட்டு திரும்பி சென்றார்

முள்ளிக்குப்பத்தில் புதிய தலைமைச் செயலகம்: அரசாணையை ரத்து செய்யக் கோரி செப்டம்பர் 29-இல் மீனவர்கள் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

MUST READ