Homeசெய்திகள்மாவட்டம்சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கும் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் – கோவையில் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கும் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் – கோவையில் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

-

- Advertisement -

தீபாவளி பண்டிகை விடுமுறையை முன்னிட்டு கோவையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்ல கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் பேருந்து நிலையங்களில் குவிந்து வருகின்றனர்.சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கும் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் – கோவையில் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

பண்டிகையை குடும்பத்தினருடன் கொண்டாடுவதற்காக வெளியூர்களுக்குச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், கோவை கோட்ட அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன்படி, கோவை மாவட்டத்தில் இருந்து வெளியூர்களுக்குச் செல்ல வழக்கமாக இயக்கப்படும் 5,000 பேருந்துகளுடன் கூடுதலாக 2,895 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

we-r-hiring

இந்தச் சிறப்புப் பேருந்துகளின் சேவை நேற்று முதல் தொடங்கியுள்ளது. பயணிகளின் வசதிக்காக அவர்கள் செல்ல வேண்டிய ஊர்களுக்கு ஏற்ப வெவ்வேறு பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

டெல்டா மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் சூலூர் பேருந்து நிலையத்தில் இருந்தும், தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்தும் இயக்கப்படுகின்றன.

மேற்கு மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் காந்திபுரம் மத்தியப் பேருந்து நிலையத்தில் இருந்தும், நீலகிரி மாவட்டத்துக்குச் செல்லும் பேருந்துகள் சாயிபாபா காலனி புதிய பேருந்து நிலையத்தில் இருந்தும் புறப்படுகின்றன.

அதேபோல், பழநியை மையமாகக் கொண்டு செல்லும் பேருந்துகள் உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், கோவையின் முக்கியப் பேருந்து நிலையங்களில் பயணிகளின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கோவில் பெட்டகத்தில் மகளின் நகை இருப்பதாக போலி அரசு முத்திரையுடன் ஆவணம் தயாரிப்பு – மதிமுக ஒன்றியச் செயலாளர் கைது!

MUST READ