Homeசெய்திகள்மாவட்டம்திண்டுக்கல்லில் பிரபல தொழில் அதிபரும், தவெக மாமன்ற உறுப்பினரின் தந்தையுமான ரத்தினம் வீடு மற்றும் அலுவலகத்தில்...

திண்டுக்கல்லில் பிரபல தொழில் அதிபரும், தவெக மாமன்ற உறுப்பினரின் தந்தையுமான ரத்தினம் வீடு மற்றும் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அதிரடி சோதனை

-

- Advertisement -

திண்டுக்கல்லில் பிரபல தொழிலதிபரும், தமிழக வெற்றிக் கழக மாமன்ற உறுப்பினரின் தந்தையுமான ரத்தினத்தின் வீடு மற்றும் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று (நவம்பர் 6) காலை அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இந்த சோதனை நடைபெற்றது.

we-r-hiring

திண்டுக்கல்லைச் சேர்ந்த தொழிலதிபர் ரத்தினம், திண்டுக்கல் மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார். மேலும், மணல் குவாரி, ரியல் எஸ்டேட் மற்றும் வீடுகள் கட்டி விற்பனை செய்யும் தொழில்களிலும் ஈடுபட்டு வருகிறார்.

திண்டுக்கல் ஜி.டி.என். சாலையில் ரத்தினத்துக்கு சொந்தமான வீடு அமைந்துள்ளது. இதன் அருகிலேயே அவரது தரணி குழும அலுவலகமும் செயல்பட்டு வருகிறது.

இரு இடங்களில் தனித்தனி குழுக்களாக சோதனை

இந்த நிலையில், இன்று (06.11.2026) காலை 7.30 மணியளவில் ரத்தினத்துக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையை தொடங்கினர்.

திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி நாகராஜ் தலைமையில் 10 பேர் கொண்ட போலீசார் தரணி குழும அலுவலகத்திலும், தேனி டிஎஸ்பி முத்துராஜா தலைமையில் 10 பேர் கொண்ட போலீசார் ரத்தினத்தின் வீட்டிலும் சோதனை மேற்கொண்டனர்.

மணல் குவாரி முறைகேடு புகார்

ரத்தினம் புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அரசு மணல் குவாரிகளை ஒப்பந்த அடிப்படையில் எடுத்து நடத்தி வந்துள்ளார். இந்த மணல் குவாரிகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன.

இதுதொடர்பாக கனிமவள முறைகேடு விவகாரத்தில் சென்னை சிறப்பு புலனாய்வுப் பிரிவு போலீசார் வழக்கு எண் 8/26-ன் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கின் தொடர்பாகவே ரத்தினத்துக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நீடித்தது.

தவெக மாமன்ற உறுப்பினரின் தந்தை

இதற்கிடையே, ரத்தினத்தின் இரண்டாவது மகன் வெங்கடேஷ், திண்டுக்கல் மாநகராட்சியின் 17-வது வார்டு மாமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு களைகட்டிய திருமங்கலம் ஆட்டுச் சந்தை – ஒரே நாளில் ரூ.7 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை!

MUST READ