Homeசெய்திகள்மாவட்டம்மன்னார்குடி அருகே கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு – 2 நாட்களாக பல லட்சம்...

மன்னார்குடி அருகே கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு – 2 நாட்களாக பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகும் அவலம்!

-

- Advertisement -

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே தென்பாதி மெயின் ரோடு பகுதியில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள பிரதான குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கடந்த இரண்டு நாட்களாகப் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி வருவது அப்பகுதி மக்களிடையே வேதனையையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.மன்னார்குடி அருகே கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு – 2 நாட்களாக பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகும் அவலம்!

பிரதான குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பு காரணமாக தண்ணீர் தொடர்ந்து வெளியேறி, சாலையோரங்களில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் பல்வேறு பகுதிகளுக்குக் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில், பிரதான குழாயிலேயே உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

we-r-hiring

ஏற்கனவே பல்வேறு பகுதிகளில் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில், குடிநீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், மன்னார்குடி அருகே பிரதான குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பைச் சீரமைக்காமல் இரண்டு நாட்களாகத் தண்ணீர் வீணாகி வருவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் உடனடியாக நேரில் ஆய்வு செய்து, குழாய் உடைப்பைச் சீரமைத்து குடிநீர் வீணாவதைத் தடுக்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க உரிய பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஹெல்மெட் அணிந்து வந்த பெண்களுக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட்! பெரிய வெங்காயம் 2 கிலோ, சின்ன வெங்காயம் 2 கிலோ வழங்கிய போக்குவரத்து போலீசார்

MUST READ