தேனி அல்லிநகரம் நகராட்சிக் கூட்டத்தில் பெரியகுளம் தொகுதி தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ. சபரி ஐங்கரன் பேசியபோது, திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
கூட்டத்தில் பேசிய எம்.எல்.ஏ. சபரி ஐங்கரன், கடந்த நான்கரை ஆண்டுகால ஆட்சியில் மக்கள் நலப் பணிகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை என்று விமர்சித்ததாகக் கூறப்படுகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக கவுன்சிலர்கள், தற்போதைய தமிழக வெற்றிக் கழக அரசு நகராட்சிக்குத் தேவையான நிதியை முறையாக ஒதுக்கவில்லை என்று குற்றம்சாட்டினர்.
இதனால், நகராட்சிப் பணிகள் மற்றும் நிதி ஒதுக்கீடு தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.
நகராட்சிக் கூட்டத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே ஏற்பட்ட இந்த வாக்குவாதம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
