Homeசெய்திகள்மாவட்டம்திருப்பரங்குன்றம் அருகே தவெக பிரமுகருக்குச் சொந்தமான குவாரிக்கு ரூ.7.5 கோடி அபராதம்: திருமங்கலம் கோட்டாட்சியர் அதிரடி...

திருப்பரங்குன்றம் அருகே தவெக பிரமுகருக்குச் சொந்தமான குவாரிக்கு ரூ.7.5 கோடி அபராதம்: திருமங்கலம் கோட்டாட்சியர் அதிரடி உத்தரவு!

-

- Advertisement -

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே அனுமதியை மீறிச் சட்டவிரோதமாகக் கற்கள் மற்றும் கிராவல் மண் வெட்டிக் கடத்திய புகாரின் பேரில், தமிழக வெற்றிக் கழகப் பிரமுகருக்குச் சொந்தமான குவாரிக்கு ரூ.7.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.திருப்பரங்குன்றம் அருகே தவெக பிரமுகருக்குச் சொந்தமான குவாரிக்கு ரூ.7.5 கோடி அபராதம்: திருமங்கலம் கோட்டாட்சியர் அதிரடி உத்தரவு!

வழக்கின் பின்னணி
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா நிலையூர் அடுத்த கருவேலம்பட்டியில் உள்ள பட்டா நிலத்தில் குவாரி நடத்த கடந்த 2015 முதல் 2020 ஆம் ஆண்டு வரை ஐந்து ஆண்டுகளுக்கு அனுமதி பெறப்பட்டிருந்தது.

we-r-hiring

ஆனால், அனுமதிக்கப்பட்ட எல்லையைத் தாண்டி அருகிலுள்ள அரசு புறம்போக்கு நிலங்களில், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த பாரி மற்றும் அவரது மருமகன் முருகேசன் ஆகியோர் சட்டவிரோதமாகக் கற்கள் மற்றும் கிராவல் மண்ணை வெட்டி எடுத்ததாகப் புகார்கள் எழுந்தன.

இதுதொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த ராமன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து நடவடிக்கை
உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், வருவாய்த் துறையினர் மற்றும் கனிம வளத்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அரசு புறம்போக்கு நிலத்தில் 54,084.02 கன மீட்டர் கற்கள் மற்றும் 23,689.42 கன மீட்டர் கிராவல் மண் ஆகியவை அனுமதியின்றி வெட்டி கடத்தப்பட்டு, அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, அரசுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்டும் வகையில் தவெக பிரமுகர் பாரி மற்றும் முருகேசன் ஆகியோருக்கு ரூ. 7,50,00,000 (ஏழரை கோடி ரூபாய்) அபராதம் விதித்து திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இந்த அபராதத் தொகையை உடனடியாகக் கனிம வளத்துறையின் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவிலிருந்து தவெகவிற்கு மாறிய பின்னணி
அபராதத்திற்குள்ளான தவெக பிரமுகர் பாரி, முன்பு அதிமுகவில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர் என்பதும், மாநிலத்தில் ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் தனது மருமகன் முருகேசனுடன் இணைந்து தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சட்டவிரோதக் குவாரி விவகாரத்தில் தவெக பிரமுகருக்கு ரூ.7.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுராந்தகம் இடைத்தேர்தல்: மரகதம் குமரவேல்–புஸ்சி ஆனந்த் பிரச்சாரத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு

MUST READ