திருப்பூர் மாவட்டம் முரட்டுப்பாளையம் பகுதியில், பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு 108 ஆம்புலன்ஸுக்குள்ளேயே அவசரப் பிரசவம் பார்க்கப்பட்டு, அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேய்யும் நலமுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆம்புலன்ஸில் ஏற்பட்ட திடீர் பிரசவ வலி
திருப்பூர் முரட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த வினோதினி என்ற கர்ப்பிணிப் பெண்ணிற்கு திடீரென கடுமையான பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக குடும்பத்தினர் 108 அவசர ஊர்தி சேவைக்குத் தகவல் தெரிவித்தனர்.

தகவல் கிடைத்தவுடன் விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளர் கோவிந்தராஜ் ஆகியோர், வினோதினியை மீட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆம்புலன்ஸ் மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருந்த வழிப்பாதையில், வினோதினிற்குக் பிரசவ வலி உச்சக்கட்டத்தை அடைந்தது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த மருத்துவ உதவியாளர் கோவிந்தராஜ், மருத்துவமனைக்குச் செல்வதற்குள் பிரசவம் பார்த்தே ஆக வேண்டிய கட்டாயத்தை எதிர்கொண்டார்.
துணிச்சலான உதவியாளரும், பிறந்த ‘தேவதையும்’
மருத்துவ உதவியாளர் கோவிந்தராஜின் துரிதமான மற்றும் சரியான சமயோஜித நடவடிக்கையால், ஆம்புலன்ஸுக்குள்ளேயே வினோதினிக்குச் சுகப்பிரசவம் ஆனது. அப்போது அவர் ஒரு அழகிய பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். குழந்தையைப் பார்த்த மகிழ்ச்சியில் அங்கிருந்தவர்கள் “வா வா என் தேவதையே” எனக் கூறி தங்களது நெகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து, தாயும் புதிதாகப் பிறந்த பெண் குழந்தையும் எந்தவிதமான ஆபத்துமின்றி நல்ல ஆரோக்கியத்துடன் திருப்பூர் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவசரச் சூழலில் துரிதமாகச் செயல்பட்டுப் பிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளர் கோவிந்தராஜ் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஆகியோரின் பணியைப் பாராட்டி பொதுமக்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
பழனி கோவில் நில மோசடி வழக்கு.. சப்-ரிஜிஸ்ட்ராருக்கு ஜாமீன் மறுப்பு – தொடரும் விசாரணை!
