Homeசெய்திகள்அரசியல்கோயம்புத்தூரில் முதலமைச்சர் விஜய்! – தாராபுரம் இடைத்தேர்தல் பரப்புரைக்காக வருகை கோவை வந்தடைந்தார் விஜய்

கோயம்புத்தூரில் முதலமைச்சர் விஜய்! – தாராபுரம் இடைத்தேர்தல் பரப்புரைக்காக வருகை கோவை வந்தடைந்தார் விஜய்

-

- Advertisement -

தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, இன்று பிற்பகல் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவதற்காக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கோயம்புத்தூர் வந்தடைந்தார்.கோயம்புத்தூரில் முதலமைச்சர் விஜய்! – தாராபுரம் இடைத்தேர்தல் பரப்புரைக்காக வருகை கோவை வந்தடைந்தார் விஜய்

கோவை விமான நிலையத்திற்கு வந்த விஜய்க்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். விமான நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கட்சியினர் திரண்டிருந்தனர்.

we-r-hiring

சாலை மார்க்கமாக தாராபுரம் பயணம்

கோயம்புத்தூர் விமான நிலையத்தில் இருந்து விஜய் சாலை மார்க்கமாக தாராபுரம் செல்ல உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தாராபுரம் செல்லும் வழியில் பொதுமக்களை சந்திக்கும் வகையில் ரோடுஷோவும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் விஜய் செல்லும் வழித்தடத்தில் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் திரளும் சூழல் ஏற்பட்டுள்ளது.

ரோடுஷோவுக்கு ஏற்பாடுகள்

விஜய்யின் வருகையை முன்னிட்டு அவர் செல்லும் வழித்தடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ரோடுஷோ நடைபெறும் பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் திரள வாய்ப்புள்ளதால் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தாராபுரத்தில் தீவிர பிரச்சாரம்

தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், விஜய் இன்று அத்தொகுதியில் வாக்கு சேகரிக்க உள்ளார். ரோடுஷோவை தொடர்ந்து தாராபுரத்தில் நடைபெறும் பிரச்சார நிகழ்ச்சியில் அவர் உரையாற்ற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய்யின் இன்றைய தாராபுரம் பிரச்சாரம் தேர்தல் களத்தில் கவனம் பெற்றுள்ள நிலையில், அவரது வருகையையொட்டி கட்சி தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் உற்சாகத்துடன் திரண்டு வருகின்றனர்.

வெயில் அதிகமாக இருக்கு.. புளியமரத்துக்கு கீழே நின்றுகொண்டு பொறுமையாக உள்ளே போங்க! – தாராபுரம் தவெக பிரச்சார இடத்தில் பொதுமக்களுக்கு போலீசார் அறிவுரை

MUST READ