சென்னை அருகே திருமுல்லைவாயலில் மாடு திருடிச் சென்ற கும்பலை பைக்கில் விரட்டிச் சென்ற மாட்டின் உரிமையாளர், திருடர்கள் வாகனத்தை திடீரென நிறுத்தியதால் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார்.
திருமுல்லைவாயல் பகுதியில் வாகனத்தில் மாடு திருடிச் சென்ற கும்பலை, அதன் உரிமையாளரான மனோஜ் பைக்கில் பின்தொடர்ந்து விரட்டிச் சென்றுள்ளார். அவர் தங்களைத் துரத்தி வருவதை கவனித்த திருடர்கள், தங்களது வாகனத்தை திடீரென நிறுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் பின்னால் பைக்கில் வந்த மனோஜ், அந்த வாகனம் மீது மோதியுள்ளார். இந்த விபத்தில் மனோஜ் படுகாயமடைந்தார்.
படுகாயமடைந்த அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாம்பரம் அருகே ரவுடி சுட்டுப்பிடிப்பு! – போலீசாரை தாக்கியதால் தற்காப்புக்காக துப்பாக்கிச்சூடு
