Homeசெய்திகள்இந்தியாஇந்திய தலைமை தேர்தல் ஆணையரை பொம்மை போல பிரதமர் நரேந்திர மோடி இயக்குவதாக அகில இந்திய...

இந்திய தலைமை தேர்தல் ஆணையரை பொம்மை போல பிரதமர் நரேந்திர மோடி இயக்குவதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சி கார்ட்டூன் புகைப்படம் வெளியிட்டுள்ளது!

-

- Advertisement -

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவியில் இருந்து விலக்கப்பட வேண்டும் அல்லது ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் உட்பட இந்தியா கூட்டணிக் கட்சியின் தலைவர்கள் போராட்டம் மற்றும் பேரணிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

we-r-hiring

குறிப்பாக எதிர்க்கட்சிகள் ஆளக்கூடிய மாநிலங்களில் எதிர்க்கட்சிகளின் தலைவர்களை வீழ்த்தும் வகையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையரின் செயல்பாடு இருந்ததாக காங்கிரஸ் குற்றம் சாட்டும் நிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் மத்திய பாஜக அரசுக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.

இந்நிலையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி அதன் சமூக வலைதள பட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி இந்திய தலைமை தேர்தல் ஆணையரை பொம்மலாட்ட பொம்மை போல இயக்குவது போல் சித்தரிக்கப்பட்ட கார்ட்டூன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

மேலும் புகைப்படத்தை வெளியிட்டு அதற்கு ஜனநாயகத்தின் துரோகிகள் எனவும் காங்கிரஸ் கட்சி தலைப்பிட்டு பகிர்ந்துள்ளது சமூக வலைதளங்களில் பேசும் பொருளாகியுள்ளது.

லடாக்கில் புதிய பாராசூட் வெற்றிகரமாக சோதனை: 16,000 அடி உயரத்தில் DRDO சாதனை!

MUST READ