Homeசெய்திகள்தமிழ்நாடுஎஸ்.ஐ.ஆர் -க்கு பின்பு நடைபெற்ற அனைத்து தேர்தல்களையும் ரத்து செய்ய வேண்டும் என பொன்ராஜ் வலியுறுத்தியுள்ளார்.

எஸ்.ஐ.ஆர் -க்கு பின்பு நடைபெற்ற அனைத்து தேர்தல்களையும் ரத்து செய்ய வேண்டும் என பொன்ராஜ் வலியுறுத்தியுள்ளார்.

-

- Advertisement -

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் அரசியல் ஆலோசகர் பொன்ராஜ் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பின்பு செய்தியாளர்களை சந்தித்தார்எஸ்.ஐ.ஆர் -க்கு பின்பு நடைபெற்ற அனைத்து தேர்தல்களையும் ரத்து செய்ய வேண்டும் என பொன்ராஜ் வலியுறுத்தியுள்ளார்.

அப்போது பேசிய அவர், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) நம்பகத்தன்மை குறித்தும், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணி (SIR) குறித்தும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த உள்ளதாக ‘இந்திய மக்கள் வாக்குரிமை மீட்பு இயக்கம் சார்பில் தெரிவித்தார்.

we-r-hiring

EVM இயந்திரங்களை முற்றிலும் ஒழித்துவிட்டு, மீண்டும் வாக்குச்சீட்டு முறையைக் கொண்டுவர வேண்டும்.

வாக்காளர்கள் அளிக்கும் வாக்கு VVPAT சீட்டாக அச்சிடப்பட்டு, அதை வாக்காளரே சரிபார்த்து தனிப் பெட்டியில் (Ballot Box) போடும் வசதியை ஏற்படுத்த வேண்டும். அந்த வாக்குச்சீட்டுகளையும் EVM பதிவுகளையும் ஒப்பிட்டுச் சரிபார்க்க வேண்டும்…

வாக்காளர்கள் நீக்கம் மற்றும் சீரமைப்பு என்ற பெயரில் எடுக்கப்படும் SIR நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும்…

நீக்கப்பட்ட கோடிக்கணக்கான வாக்காளர்களின் பெயர்களை மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும்…

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அவர்களின் தன்னிச்சையான நடவடிக்கைகளைக் கண்டித்து அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்

தமிழகத்தில் இருந்து புறப்பட்டு, டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாகவும் மேலும் டெல்லியில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்தித்து, EVM ஒழிப்பு மற்றும் ஜனநாயக மீட்புக்கான இந்த போராட்டத்திற்கு ஆதரவு திரட்ட உள்ளதாகவும் கூறினார்.

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் உட்பட பல்வேறு கட்சித் தலைவர்களைச் சந்தித்து இது குறித்துப் பேசியுள்ளதாகவும், மக்கள் உரிமைக்காகப் போராட்டக் களத்திற்கு வருமாறு இளைஞர்களுக்கும் சிவில் சமூக அமைப்புகளுக்கும் கோரிக்கை விடுத்தார்.

84 தொகுதிகளில் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற காரணமாக அமைந்தது எஸ் ஐ ஆர், மற்றும் evm மிஷின், யார் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கிறார்களோ அதனை EVM மிஷினை வைத்து செய்கிறார்கள், தற்பொழுது நடைபெறும் தேர்தல்களை எப்படி நியாயமான தேர்தல் என்று சொல்ல முடியும், எஸ் ஐ ஆர் பின்புக்கு நடைபெற்ற அனைத்து தேர்தல்களையும் ரத்து செய்ய வேண்டும் என கேட்டு கொண்டார்.

அரசுப்பள்ளி குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலந்ததாக புகார்: பள்ளி நிர்வாகம் மீது டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

MUST READ