Homeசெய்திகள்தமிழ்நாடுஅதிமுகவினரை விட திமுகவினர் அதிகமாக சாமியை கும்பிடுகிறோம்- அமைச்சர் பெரியகருப்பன்

அதிமுகவினரை விட திமுகவினர் அதிகமாக சாமியை கும்பிடுகிறோம்- அமைச்சர் பெரியகருப்பன்

-

- Advertisement -

அதிமுகவினரை விட திமுகவினர்தான் சாமியை அதிகமாக கும்பிடுவதாக முன்னாள் அமைச்சர் பாஸ்கரனின் பேச்சுக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் பதிலளித்துள்ளார்.

சிவகங்கை அரண்மனை வாசலில் இனமானப் பேராசிரியர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நகர் மன்ற தலைவர் துரை ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் பேசுகையில் திமுகவை சாமி இல்லாத கட்சி என முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் விமர்சித்ததற்கு, “சாமி இல்லாத கட்சி என யார் சொன்னது? அதிமுகவினரை விட திமுகவினர்தான் அதிகமாக சாமியை கும்பிடுகிறோம். எங்களது தலைவர்கள் முதல் தொண்டார்கள் வரை யாரும் கடவுளுக்கு எதிர்ப்பாளர்கள் இல்லை.

we-r-hiring

முன்னாள் அமைச்சர் பாஸ்கரனுக்கு நாவடக்கம் தேவை. தனிநபர் விமர்சனங்களை பேசுவது நன்றாக இருக்காது, முதல்வர் குறித்து விமர்சிப்பது பெருவாரியாக இருந்தால் அதனையும் சந்திக்க தயார்” எனக் கூறினார்.

MUST READ