- Advertisement -
போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் பெற்ற வெற்றியை எதிர்த்து வாக்காளர் ஒருவர் தொடர்ந்த தேர்தல் வழக்கைச் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு ஏற்பு

தனக்கு எதிராகத் தொடரப்பட்ட தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.பி.பாலாஜி, ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கையை ஏற்று, தேர்தல் வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதன் மூலம் போடிநாயக்கனூர் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வத்தின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.
