இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில், ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியுள்ள ‘ராமாயணா – பாகம் 1’ திரைப்படம், திரையரங்குகளில் வெளியாகும் முன்பே முன்பதிவு வசூலில் மிகப்பெரிய சாதனையைப் பதிவு செய்துள்ளது.


முன்பதிவில் ரூ.96.56 கோடி வசூல்
நவம்பர் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படம், இந்திய அளவில் முதல் ஐந்து நாட்களுக்கான முன்பதிவில் ரூ.96.56 கோடி வசூலித்துள்ளதாகத் திரைப்பட வர்த்தகக் கண்காணிப்பு நிறுவனமான சாக்னில்க் தெரிவித்துள்ளது.
நவம்பர் 4-ஆம் தேதி காலை நிலவரப்படி, நாடு முழுவதும் சுமார் 25.65 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. திரையரங்குகளில் முன்கூட்டியே ஒதுக்கப்பட்டு முடக்கப்பட்ட இருக்கைகளின் மதிப்பையும் சேர்த்து இந்த வசூல் கணக்கிடப்பட்டுள்ளது. அவற்றைத் தவிர்த்து, உண்மையில் விற்பனையான டிக்கெட்டுகளின் மதிப்பு ரூ.77.31 கோடியாக உள்ளது.
ஹிந்தி மொழியில் அதிக வரவேற்பு
மொழி வாரியான முன்பதிவில் ஹிந்தி பதிப்பு முதலிடத்தில் உள்ளது. மொத்த முன்பதிவு வசூலில் சுமார் 82 சதவீதத்தை ஹிந்தி பதிப்பு பெற்றுள்ளது. இதன் மூலம் ஹிந்தி மொழியில் மட்டும் ரூ.78.88 கோடி வசூலாகியுள்ளது.
தெலுங்கு பதிப்பு ரூ.8.09 கோடியும், கன்னடப் பதிப்பு ரூ.7.27 கோடியும், தமிழ் பதிப்பு ரூ.1.84 கோடியும் வசூலித்துள்ளன. மலையாளப் பதிப்பின் முன்பதிவு வசூல் ரூ.49.23 லட்சமாக உள்ளது.
முதல் நாள் வசூல் ரூ.39.35 கோடி
திரைப்படம் வெளியாகும் முதல் நாளான நவம்பர் 5-ஆம் தேதிக்கு மட்டும் ரூ.39.35 கோடி மதிப்பிலான சுமார் 10.11 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைக்கான முன்பதிவுகளையும் சேர்த்து ஐந்து நாட்களுக்கான மொத்த வசூல் ரூ.96.56 கோடியை எட்டியுள்ளது.
வெளிநாட்டு முன்பதிவுகளையும் சேர்த்துக் கணக்கிடும்போது, இப்படம் உலகளவில் ரூ.100 கோடி முன்பதிவு வசூலைத் தாண்டியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நட்சத்திரப் பட்டாளத்துடன் பிரம்மாண்ட தயாரிப்பு
நிதேஷ் திவாரி இயக்கியுள்ள இப்படத்தில் ரன்பீர் கபூர் ராமர் கதாபாத்திரத்திலும், சாய் பல்லவி சீதை கதாபாத்திரத்திலும், யாஷ் ராவணன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். மேலும், ரவி துபே உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் நவம்பர் 5-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது. முன்பதிவில் கிடைத்துள்ள வரவேற்பு, படத்தின் தொடக்கநாள் வசூல் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
‘மூக்குத்தி அம்மன் 2’ ரிலீஸை முன்னிட்டு நயன்தாராவின் ஆன்மீக தரிசனம்… வீடியோ வைரல்!
