சுந்தர். சி சமீபத்தில் நடந்த பேட்டியில் மூக்குத்தி அம்மன் 2 படம் குறித்து பேசி உள்ளார்.
இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம் வரும் நவம்பர் 6-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் படம் சந்திக்கும் முக்கிய சவால் குறித்தும், படத்தின் கதைக் களம் குறித்தும் சுந்தர். சி மனம் திறந்து பேசியுள்ளார். அதன்படி அவர், “மூக்குத்தி அம்மன் 2 படத்துல நாங்க சந்திக்கிற மிகப்பெரிய சவாலே என்னன்னா இது ஒரு அவுட் அண்ட் அவுட் ஃபேண்டஸி திரைப்படம். அதனால முதல் பாகத்துக்கும் இந்த ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்துக்கும் நேரடியா எந்த தொடர்பும் இருக்காது. முதல் பாகத்துல கதை ஒரு நடுத்தர குடும்பத்தைப் பற்றியது. அவங்களோட வாழ்க்கையில அம்மன் வர்ற மாதிரியும், அன்றாட நிஜ வாழ்க்கைச் சம்பவங்களை மையப்படுத்தியும் படம் அமைஞ்சிருக்கும். ஆனா ‘மூக்குத்தி அம்மன் 2’ முற்றிலும் மாறுபட்ட ஒரு ஃபேண்டஸி படம்.
இதுல இரண்டு வெவ்வேற காலக்கட்டங்கள் ஒண்ணா இணையுது. குறிப்பாக படத்தின் இரண்டாம் பாதியில, 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு புதிய உலகத்தையே நாங்க அறிமுகப்படுத்துறோம். அந்த பிரம்மாண்டமான உலகத்தை உருவாக்கி திரைக்குக் கொண்டு வர நாங்க இரவு பகலா கடுமையான உழைப்பைக் கொடுத்திருக்கோம்” என்று தெரிவித்துள்ளார். நயன்தாராவின் கம்பீரமான அம்மன் அவதாரம் மற்றும் 2,000 வருடப் பின்னோக்கிய ஃபேண்டஸி உலகம் போன்றவை படத்தில் மீதான எதிர்பார்ப்பு அதிகப்படுத்தி இருக்கிறது. அதே சமயம் இந்த படம் முற்றிலும் புதிய அனுபவத்தை வழங்கி திரையரங்குகளில் மாபெரும் ஹிட்டடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
