- Advertisement -
சென்னை MRC நகரில் ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் ஆகியோரை வரவேற்று வைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட பேனர்களை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.
பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக இருப்பதாகக் கூறி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இரு தலைவர்களையும் வரவேற்கும் வகையில் MRC நகரில் பெரிய அளவிலான பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகக் கூறி அங்கு வந்த மாநகராட்சி ஊழியர்கள் பேனர்களை அகற்றினர்.
சென்னையில் அனுமதியின்றி அல்லது பொதுமக்களுக்கு இடையூறாக வைக்கப்படும் பேனர்களுக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த அகற்றும் பணி நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
