Homeசெய்திகள்மாவட்டம்கொடைக்கானல் பண்ணைக்காட்டில் காட்டு யானை அட்டகாசம் – வனத்துறையினரையே துரத்திய யானை; மரத்தில் ஏறி உயிர்...

கொடைக்கானல் பண்ணைக்காட்டில் காட்டு யானை அட்டகாசம் – வனத்துறையினரையே துரத்திய யானை; மரத்தில் ஏறி உயிர் தப்பிய பணியாளர்கள்!

-

- Advertisement -

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே உள்ள பண்ணைக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.கொடைக்கானல் பண்ணைக்காட்டில் காட்டு யானை அட்டகாசம் – வனத்துறையினரையே துரத்திய யானை; மரத்தில் ஏறி உயிர் தப்பிய பணியாளர்கள்!

இந்நிலையில், காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்ட வனத்துறை பணியாளர்களையே யானை துரத்தியதால், அவர்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள மரத்தின் மீது ஏறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

we-r-hiring

இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியில் அமைந்துள்ள பண்ணைக்காடு பேரூராட்சியைச் சுற்றி தாண்டிக்குடி, மங்களம்கொம்பு உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

இப்பகுதி மக்களின் பிரதான தொழிலாக விவசாயம் இருந்து வரும் நிலையில், கடந்த சில ஆண்டுகளாகவே காட்டு யானைகளின் நடமாட்டம் விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் பெரும் சவாலாக இருந்து வருகிறது.

குறிப்பாக, காட்டு யானைகள் வனப்பகுதிகளை விட்டு வெளியேறி கிராமங்களுக்குள் புகுந்து உலா வருவதால், விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதுடன் பொதுமக்களும் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

இதையடுத்து, கொடைக்கானல் வனத்துறையினர் கிராமப் பகுதிகளில் சுற்றித்திரியும் யானைகளை மீண்டும் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், வனப்பகுதிக்குள் யானையை விரட்ட முயன்ற வனப் பணியாளர்களை எதிர்பாராத விதமாக காட்டு யானை துரத்தியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பணியாளர்கள், யானையிடமிருந்து தப்பிக்க அருகில் இருந்த மரத்தின் மீது ஏறி உயிரைக் காப்பாற்றிக் கொண்டனர்.

இந்தக் காட்சிகளைப் பதிவு செய்த வீடியோ தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மட்டுமின்றி, காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபடும் வனத்துறை ஊழியர்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

பண்ணைக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கீழ்மலை கிராமங்களில் யானைகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்கள் மற்றும் வனப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி நகராட்சி கூட்டத்தில் தவெக எம்.எல்.ஏ. சபரி ஐங்கரனுடன் திமுக கவுன்சிலர்கள் வாக்குவாதம் – நிதி ஒதுக்கீடு குறித்து காரசார விவாதம்!

MUST READ