Homeசெய்திகள்சினிமா'மிஸ்டர் பாரத்' படத்திலிருந்து கலகலப்பான ட்ரெய்லர் வெளியீடு!

‘மிஸ்டர் பாரத்’ படத்திலிருந்து கலகலப்பான ட்ரெய்லர் வெளியீடு!

-

- Advertisement -

மிஸ்டர் பாரத் படத்திலிருந்து கலகலப்பான ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.'மிஸ்டர் பாரத்' படத்திலிருந்து கலகலப்பான ட்ரெய்லர் வெளியீடு!

​பிரபல யூடியூபர் பாரத் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ‘மிஸ்டர் பாரத்’.
​அறிமுக இயக்குநர் நிரஞ்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் யூடியூபர் பாரத் மற்றும் சம்யுக்தா விஸ்வநாதன் இருவரும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் பாலா சரவணன், நிதி பிரதீப், ஆர். சுந்தரராஜன், லிங்கா, ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அறிமுக இசையமைப்பாளர் பிரணவ் முனிராஜ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பேஷன் ஸ்டுடியோஸ், தி ரூட் மற்றும் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளன. அனைத்து தரப்பு ரசிகர்களையும் சிரிக்க வைக்கும் வகையில் தயாராகியுள்ள ‘மிஸ்டர் பாரத்’ வரும் டிசம்பர் 11, 2026 அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

we-r-hiring

கிரேஸி மோகன் பாணியிலான வசனங்கள் மற்றும் நகைச்சுவைக் காட்சிகளுடன் இப்படம் ஒரு சிறந்த ஃபன்-ஃபில்ட் எண்டர்டெயினராக உருவாகியுள்ளது. மேலும், இப்படத்தில் ‘அயலான்’ பட இயக்குநர் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ட்ரெய்லர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்ததுடன் மட்டுமல்லாமல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது.

MUST READ