Homeசெய்திகள்சினிமாவெற்றிக் கோப்பையுடன் சென்னை திரும்பிய அஜித் .... வீடியோ வைரல்!

வெற்றிக் கோப்பையுடன் சென்னை திரும்பிய அஜித் …. வீடியோ வைரல்!

-

- Advertisement -

நடிகர் அஜித் சென்னை திரும்பினார்.வெற்றிக் கோப்பையுடன் சென்னை திரும்பிய அஜித் .... வீடியோ வைரல்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் , தனது திரைப்படப் பணிகளுக்கு நடுவே சர்வதேச கார் ரேஸ் போட்டிகளிலும் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். கார் பந்தயங்களில் தனது திறமையைத் தொடர்ந்து நிரூபித்து வரும் அவர், ரசிகர்களுக்கு எப்போதும் ஒரு மிகப்பெரிய முன்மாதிரியாகத் திகழ்ந்து வருகிறார்.
இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் அஜித் குமார் – ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் திரையரங்குகளில் மிகப்பெரிய வெற்றி பெற்று ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றது. வெற்றிக் கோப்பையுடன் சென்னை திரும்பிய அஜித் .... வீடியோ வைரல்!அந்தப் பிரம்மாண்டமான வெற்றியைத் தொடர்ந்து, இந்த வெற்றிக் கூட்டணி டேர் டெவில் என்ற படத்தில் மீண்டும் இணைய இருக்கிறது. இப்படத்தை ஷாலினி அஜித் குமார் பிரம்மாண்டமாகத் தயாரிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார். மேலும் இப்படத்தில் பிரபு, பார்த்திபன், ஸ்ரீலீலா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.

we-r-hiring

இந்நிலையில், தனது சர்வதேச கார் ரேஸ் போட்டிகளை வெற்றிகரமாக நிறைவு செய்த அஜித் குமார், போட்டியில் வென்ற பிரம்மாண்டமான வெற்றிக் கோப்பையை கையில் ஏந்தியபடி சென்னை விமான நிலையத்திற்கு வந்து இறங்கியுள்ளார். சென்னை வந்தடைந்துள்ள அவர், அடுத்ததாக டேர் டெவில் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார். அத்துடன் வெற்றிக் கோப்பையோடு வந்து இறங்கிய அஜித்தின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ