சூர்யாவின் சீன் மற்றும் நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2 ஆகிய படங்களின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் அப்டேட் வெளியாகியுள்ளது.
சூர்யாவின் சீன் மற்றும் நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2 ஆகிய படங்கள் நேற்று (நவம்பர் 6) உலகம் முழுவதும் திரையரங்குகளில் திரையிடப்பட்டது. அதில் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா, நஸ்ரியா, நஸ்லேன் ஆகியோரின் நடிப்பில் வெளியான சீன் திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. அதேபோல் நயன்தாரா நடிப்பில் வெளியான ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம் குடும்பப் பார்வையாளர்களின் பேராதரவைப் பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இருப்பினும் சூர்யாவின் சீன் திரைப்படம் இளைஞர்களின் அமோக ஆதரவோடு திரையரங்குகளில் வசூல் மழை பொழிந்து வருகிறது. அந்த வகையில் சீன் திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ. 35 கோடி வரை வசூல் செய்திருப்பதாக தகவல்கள் செய்துள்ளது. அடுத்தது மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.1.88 கோடி வரை வசூல் செய்திருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரண்டு திரைப்படங்களும் வெவ்வேறு பாணி கதைக்களத்தோடு களமிறங்கி நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், இனிவரும் நாட்களில் பாக்ஸ் ஆபீஸ் ரேஸில் எந்தத் திரைப்படம் அதிக வசூலைக் குவித்து முதலிடத்தைப் பிடிக்கும் என்பதை அறிய ரசிகர்களும் திரையுலகினரும் மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
