Homeசெய்திகள்தமிழ்நாடுஓய்வுபெற்ற நீதியரசர் குரியன் ஜோசப் உள்ளிட்ட 3 உறுப்பினர்களுக்கு மு.க.ஸ்டாலின் நன்றி!

ஓய்வுபெற்ற நீதியரசர் குரியன் ஜோசப் உள்ளிட்ட 3 உறுப்பினர்களுக்கு மு.க.ஸ்டாலின் நன்றி!

-

- Advertisement -

“அரசுகள் மாறலாம்; குழுக்கள் கலைக்கப்படலாம். ஆனால், இந்தியக் கூட்டாட்சிக் கருத்தியலுக்கும் மாநில சுயாட்சிக்கும் இக்குழுவினர் ஆற்றியுள்ள அறிவுசார் பங்களிப்பு காலத்தால் அழியாது” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.ஓய்வுபெற்ற நீதியரசர் குரியன் ஜோசப் உள்ளிட்ட 3 உறுப்பினர்களுக்கு மு.க.ஸ்டாலின் நன்றி!

குழுவின் மூன்று உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்து அவர் கடிதம் எழுதியுள்ளதுடன், தற்போதைய அரசின் முடிவு கடுமையான தவறு என்பதை அந்த அரசு விரைவிலோ அல்லது சற்றுத் தாமதமாகவோ உணர வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

we-r-hiring

குழுவின் பின்னணி

மத்திய – மாநில உறவுகள் மற்றும் மாநிலங்களின் உரிமைகள் குறித்து ஆய்வு செய்து பரிந்துரைகளை வழங்குவதற்காக, கடந்த 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் மூன்று பேர் கொண்ட உயர்நிலைக் குழுவை அமைத்தது.

ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி கே.அசோக் வர்தன் ஷெட்டி, பேராசிரியர் மு.நாகநாதன் ஆகியோர் இக்குழுவின் மற்ற உறுப்பினர்களாக இருந்தனர். இக்குழு தனது முதல் கட்ட அறிக்கையை 2026 பிப்ரவரி மாதம் சமர்ப்பித்திருந்தது.

குழுவைக் கலைத்த தமிழக அரசு

இந்நிலையில், மத்திய – மாநில உறவுகள் தொடர்பான உயர்நிலைக் குழுவின் பணிகள், தமிழ்நாடு மாநில சட்ட ஆணையத்தின் பணிகளுடன் ஒத்துப்போவதாகக் கூறி, நவம்பர் 6ஆம் தேதி தமிழக அரசு குழுவின் செயல்பாடுகளை உடனடியாக நிறுத்தி உத்தரவிட்டது.

குழுவின் ஆவணங்களை மாநில சட்ட ஆணையத்திடம் ஒப்படைக்கவும் அறிவுறுத்தப்பட்டது. இந்த முடிவுக்கு எதிராகவே மு.க.ஸ்டாலின் தற்போது கருத்து தெரிவித்துள்ளார்.

மாநில சுயாட்சி மற்றும் கூட்டாட்சித் தத்துவம் தொடர்பான ஆய்வுப் பணிகளில் குழுவினர் ஆற்றிய பங்களிப்பைச் சுட்டிக்காட்டியுள்ள ஸ்டாலின், குழுவின் செயல்பாடுகளை நிறுத்திய அரசின் முடிவை கடுமையாக விமர்சித்துள்ளார்

குரியன் ஜோசப் தலைமையிலான மாநில உறவுகள் உயர்மட்டக் குழு கலைப்பு! – தமிழக வெற்றிக் கழக அரசுக்கு கி.வீரமணி கடும் கண்டனம்; “பாஜகவுக்கு ஆதரவான நிலைப்பாடு தெளிவாகிறது!”

MUST READ