spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசிங்கப்பூர் உள்துறை அமைச்சருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!

சிங்கப்பூர் உள்துறை அமைச்சருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!

-

- Advertisement -

 

சிங்கப்பூர் உள்துறை அமைச்சருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
Photo: TN Govt

தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கவும், சிங்கப்பூருக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று (மே 24) காலை 10.00 AM மணிக்கு அந்நாட்டின் முன்னணி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

we-r-hiring

விஷால்- ஹரி இணையும் புதிய படம்… லேட்டஸ்ட் ஷுட்டிங் அப்டேட்!

பின்னர், மாலை 04.00 PM மணிக்கு நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் முதலீடு செய்ய முன் வருமாறு அழைப்பு விடுத்தார். அதைத் தொடர்ந்து, முதலமைச்சர் முன்னிலையில், தமிழக அரசுக்கும், சிங்கப்பூரைச் சேர்ந்த நிறுவனங்களுக்கும் இடையே ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இந்த நிலையில், இன்று (மே 25) காலை 10.00 AM மணிக்கு சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் கா.சண்முகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு நேரடி விமான சேவையைத் தொடங்க மத்திய அரசிடம் வலியுறுத்துமாறு தமிழக முதலமைச்சரின் சிங்கப்பூர் அமைச்சர் கோரிக்கை வைத்தார்.

அயலான், கேப்டன் மில்லர், ஜிகர்தண்டா 2 படங்களுடன் தீபாவளி ரேஸில் குதித்த ‘ஜப்பான்’… கார்த்தி பிறந்தநாளுக்கு ட்ரீட்

இதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இது தொடர்பாக மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்றார்.

MUST READ