திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தார்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் 93-வது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடையாற்றில் உள்ள கி.வீரமணியின் இல்லத்தில் நேரில் சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
இதுகுறித்து, முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் தனது வலைத்தளப்பக்கத்தில், “தொடரட்டும் ஆசிரியர் அய்யாவின் தொண்டறம்! தமிழ் மக்கள் நலமே தமது நலமாய், சமூகநீதி காப்பதே தன் வாழ்க்கைக் கடமையாய்ச் செயல்படும் மூப்பினை வென்ற மூவாப் போராளி அய்யா அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்.

பெரியார் திடலும் – அண்ணா அறிவாலயமும் இணைந்து விரட்ட வேண்டிய பல ஆபத்துகள் தமிழ்நாட்டைச் சுற்றி வட்டமடித்துக் கொண்டே இருக்கின்றன. பெரியாரியத் தடியும், பேரறிஞரின் மதியும், முத்தமிழறிஞரிடம் கற்ற உழைப்பும் கொண்டு திராவிட மாடல் நல்லாட்சி நிலைக்கச் செய்வோம். ஆசிரியர் அய்யாவின் அறிவுரைகளோடு தமிழ்நாட்டைத் தொடர்ந்து காப்போம்“ என முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு! நகை வாங்குவோருக்கு சற்று ஆறுதல்!


