கரூரில் 41 பேர் உயிரிழந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க தமிழக அரச எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கரூரில் தமிழக வெற்றிக் கழகம் நடத்திய பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட பெரும் விபத்தால் 41 பேர் உயிரிழந்ததும், பலர் படுகாயமடைந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்துக்கான விசாரணை தொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
அந்த மனுவில் சிபிஐ விசாரணை ரத்து செய்துவிட்டு சென்னை உயர்நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வு குழு வசமே விசாரணையை ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.

கரூர் சம்பவம் தொடர்பாக மாநில அரசால் அமைக்கப்பட்ட அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தின் விசாரணையை உச்ச நீதிமன்றம் தடை செய்திருந்தது. அந்த தடை உத்தரவை நீக்கிவிட்டு மீண்டும் ஒரு நபர் ஆணையம் விசாரணை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக அரசு தனது மனுவில் கோரியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு விசாரணை குழுவினரின் விசாரணையானது எந்த விதமான பாரபட்சம் இல்லாமல் சரியான திசையில் தான் சென்று கொண்டிருந்தது. அந்த விசாரணை நீதிமன்றம் கண்காணிப்பில் நடந்து வந்தது.
அதேபோன்று மாநில அரசும் தன்னுடைய சட்டபூர்வமான அதிகாரத்தின் அடிப்படையில் ஒரு ஒரு நபர் ஆணையத்தை விசாரணைக்காக அமைத்திருந்தது. அந்த ஆணைய விசாரணை முழு சுதந்திரமாகவும் தொடங்கி நடைபெற்று வந்திருந்தது.
இந்த நிலையில் கரூர் சம்பவம் தொடர்பான வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதோடு ஒரு நபர் ஆணையத்தின் விசாரணை தடைபட்டது. சிறப்பு விசாரணை குழு விசாரணையும் ரத்து செய்யப்பட்டது. எனவே நீதியை நிலைநாட்டும் வகையில் நடுநிலையான ஒரு உத்தரவை நீதிமன்றம் இந்த விவகாரத்தில் பிறப்பிக்க வேண்டும். உடனடியாக சிபிஐ விசாரணையை ரத்து செய்துவிட்டு தமிழ்நாடு காவல்துறையின் சிறப்பு புலனாய் குழு விசாரணையை தொடர அனுமதிக்க வேண்டும். ஒரு நபர் ஆணையத்தின் விசாரணையை தொடர்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று பதில் மனுவில் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு முதல்வர் நேரில் வாழ்த்து…


