spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுநாளை முதல் நாகை மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதி – மீன்வளத்துறையின் புதிய அறிவிப்பு!

நாளை முதல் நாகை மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதி – மீன்வளத்துறையின் புதிய அறிவிப்பு!

-

- Advertisement -

டிட்வா புயல் மற்றும்  கனமழை காரணமாக 9 நாட்களாக கடலுக்குச் செல்லாத நாகை மாவட்ட மீனவர்கள் நாளை முதல் மீண்டும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லலாம் என மீன்வளத்துறை அறிவித்துள்ளது.நாளை முதல் நாகை மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதி – மீன்வளத்துறையின் புதிய அறிவிப்பு!புயல் காரணமாக கடல் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால்  கடந்த நவம்பர் 24ஆம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதையடுத்து நாகை மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாத சூழலில் 3500 க்கும் மேற்பட்ட பைபர், நாட்டு படகுகள் மற்றும் 700-க்கும் அதிகமான விசைப்படகுகள் கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கனமழையின்  டிட்வா புயல் தாக்கம் குறைந்து நிலைமை சீராகி வரும் சூழலில் மீனவர்கள் நாளை முதல் கடலுக்கு மீன் பிடிக்க செல்லலாம் என மீன்வளத் துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

we-r-hiring

நாளை காலை 7 மணி முதல் ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு செல்லும் மீனவர்களுக்கான டோக்கன் வினியோகம் வழங்கப்பட உள்ளதாக  நாகை மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் கோ. ஜெயராஜ் தகவல் தெரிவித்துள்ளாா்.

SIR -ஐ எதிர்த்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம்..!!

MUST READ