கீழமை நீதிமன்றங்களில் இ-பைல்லிங் முறையை நடைமுறைப்படுத்துவதை கண்டித்து பொள்ளாச்சியில் நீதிமன்ற பணிகளைப் புறக்கணித்து வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனா்.
உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி கீழமை நீதிமன்றங்களில் வழக்குகளை பதிவு செய்ய ஈ- பைல்லிங் எனப்படும் மின் தாக்கல் முறையை நடைமுறைப்படுத்தப்படுகிறது. கீழமை நீதிமன்றங்களில் எந்த ஒரு கட்டமைப்பு வசதி இல்லாமல் இ- பைல்லிங் முறையை நடைமுறைப்படுத்துவதால் வழக்குகள் பாதிக்கப்படுவதாக கூறி இன்று முதல் வருகிற ஏழாம் தேதி வரை தமிழக முழுவதும் உள்ள கீழமை நீதிமன்றங்களில் பணிகளை புறக்கணித்து வழக்கறிஞர்கள் போராட்டங்களை நடத்த முடிவு செய்தனர். இதனால் இன்று கீழமை நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சியில் உள்ள நீதிமன்றத்தில் நீதிமன்ற பணிகளை வழக்கறிஞர்கள் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நீதிமன்ற பணிகளை வழக்கறிஞர்கள் புறக்கணித்ததால் வழக்குகள் தேக்கம் அடையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
டிசம்பர் 1ம் தேதியிலிருந்து இ- பைல்லிங் முறையை நடைமுறைப்படுத்தியதால் நீதிமன்ற பணிகள் பெரும் பாதிப்பு அடைந்து வருவதாகவும், இ-பைல்லிங் முறையால் முறையாக கட்டமைப்பு வசதியும், முறையான பயிற்சி இல்லாத நபர்கள் அமர்த்த படுவதால் பெரும் பாதிப்பு ஏற்படும் என்றும், எனவே முறையான பயிற்சி பெற்ற நபர்களை பணி அமர்த்தி கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் அதுவரை இ- பைல்லிங் முறையை நடைமுறைப்படுத்தக் கூடாது என்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொள்ளாச்சி வழக்கறிஞர் சங்கம் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
சென்னை எண்ணூரில் அதிகபட்சமாக 26 செ.மீ. மழை பதிவு – வானிலை ஆய்வு மையம் தகவல்



