நவம்பர் 16ஆம் தேதி திருக்கல்யாணம் வரை கட்டண தரிசனம் கிடையாது – பக்தர்கள் மகிழ்ச்சி!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா இன்று (நவம்பர் 10) காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இதையொட்டி, கோவிலில் நடைமுறையில் உள்ள ரூ.100 கட்டண தரிசனம் ரத்து செய்யப்படுவதாகக் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

கந்த சஷ்டி விழா தொடக்கம்
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான விழா இன்று காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
கந்த சஷ்டி விழாவைக் காணவும், முருகப்பெருமானைத் தரிசிக்கவும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூருக்கு வருகை தந்து வருகின்றனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
ரூ.100 கட்டண தரிசனம் ரத்து
விழா நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், அவர்களின் வசதியைக் கருத்தில் கொண்டு கோவில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, இன்று முதல் திருக்கல்யாணம் நடைபெறும் நவம்பர் 16ஆம் தேதி வரை கோவிலில் நடைமுறையில் உள்ள ரூ.100 கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கந்த சஷ்டி விழாவிற்கு வரும் பக்தர்கள் அனைவரும் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழா காலத்தில் ரூ.100 கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ள அறிவிப்பு பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
