விக்ரம் நடிக்கும் பவர் ஹவுஸ் படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விக்ரம், கடைசியாக வீர தீர சூரன் திரைப்படத்தில் நடித்திருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதைத் தொடர்ந்து விக்ரம் தனது அடுத்தடுத்த படங்களில் பிசியாக ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில், விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ‘பவர் ஹவுஸ்’ படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வரும் டிசம்பர் மாதம் வரை அப்படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இப்படமானது இலங்கைப் பின்னணியைக் கொண்ட கதையாக இருக்கலாம் என்றும், ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தை போன்ற ஒரு சூழலைக் கொண்டிருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தவிர இந்த படத்தை 2027 மே 1 தொழிலாளர் தினத்தை குறிவைத்து, ஏப்ரல் 29 அல்லது 30-ஆம் தேதிகளில் இப்படத்தைத் திரைக்குக் கொண்டுவர படக்குழு திட்டமிட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது. இனிவரும் நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.

மேலும் விக்ரமின் 63வது படமான இந்த படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விக்ரமின் இருமுகன் படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர் இப்படத்தை இயக்குகிறார். இதில் ஊர்வசி, எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இதற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது
