Homeசெய்திகள்சினிமாஅடுத்த அதிரடிக்கு தயாரான 'ஜெய் பீம்' கூட்டணி.... 'சூர்யா 48' பட ரிலீஸ் அப்டேட்!

அடுத்த அதிரடிக்கு தயாரான ‘ஜெய் பீம்’ கூட்டணி…. ‘சூர்யா 48’ பட ரிலீஸ் அப்டேட்!

-

- Advertisement -

சூர்யா 48 படம் குறித்த புதிய தகவல் வெளிவந்துள்ளது. அடுத்த அதிரடிக்கு தயாரான 'ஜெய் பீம்' கூட்டணி.... 'சூர்யா 48' பட ரிலீஸ் அப்டேட்!

சூர்யா நடிப்பில் இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவான ‘சீன்’ திரைப்படம் கடந்த நவம்பர் 6-ஆம் தேதி தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது. நடிகர் சூர்யா தனது 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பிலும், ழகரம் நிறுவனத்தின் சார்பிலும் தயாரித்திருந்த இப்படம், வெளியான முதல் நாளில் இருந்தே ரசிகர்களிடையே சூப்பர் டூப்பர் ஹிட்டாகி வெற்றி நடைபோட்டு வருகிறது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் வசூல் விபரங்களின் படி, இந்த படம் ஒரு மிகப்பெரிய லாபகரமான திரைப்படமாக அமைந்துள்ளதாக தெரியவந்திருக்கிறது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து, சூர்யா தற்போது தனது அடுத்த படத்திற்கு தீவிரமாகத் தயாராகி விட்டார். ‘ஜெய் பீம்’ மற்றும் ‘வேட்டையன்’ ஆகிய படங்களின் இயக்குநர் டி.ஜே. ஞானவேல் இயக்கத்தில் சூர்யா தனது 48வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் என ஏற்கனவே அறிவிப்பு வெளியாகியிருந்தது. பிரபல கன்னட தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாகத் தயாரிக்கும் இப்படத்தில், சூர்யா மருத்துவர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.அடுத்த அதிரடிக்கு தயாரான 'ஜெய் பீம்' கூட்டணி.... 'சூர்யா 48' பட ரிலீஸ் அப்டேட்! இவருடன் இணைந்து கயடு லோகர் நடிக்கிறார். இதன் கூடுதல் தகவல் என்னவென்றால், இப்படத்தின் படப்பிடிப்பிற்காக சூர்யா தற்போது ஜப்பான் சென்றுள்ளார். வெளிநாடுகளில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பணிகளை விரைந்து முடித்து வரும் 2027-ஆம் ஆண்டு ஏப்ரல் 14 அல்லது ஏப்ரல் 30-ஆம் தேதி படத்தைத் திரையரங்குகளில் வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும், இப்படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்கள் வரும் டிசம்பர் மாதம் முதல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ