அஜித் – ஷாலினியின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் நட்சத்திரத் தம்பதியினரான அஜித் குமார் மற்றும் ஷாலினி, ‘அமர்க்களம்’ திரைப்படத்தில் இணைந்து நடித்தபோது காதலிக்கத் தொடங்கி, பின்னர் திருமணம் செய்துகொண்டனர். திருமணமாகி 25 ஆண்டுகளுக்கும் மேலாகியும், இன்றளவும் கோலிவுட்டின் மிகச்சிறந்த மற்றும் அன்பான ஜோடியாக இவர்கள் வலம் வருகின்றனர்.
தற்போது அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் ‘டேர்டெவில்’ திரைப்படத்தை ஷாலினி அஜித்குமாரே தயாரித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று (நவம்பர் 12) ஐதராபாத்தில் தொடங்கியுள்ளது. அதே சமயம் இந்த படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றன. இந்நிலையில் அஜித் மற்றும் ஷாலினியின் புதிய புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.
ஷாலினி அஜித்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அஜித்துடன் இணைந்திருக்கும் இந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அதில், “சிறிது பாரம்பரியம் சிறிது பிரகாசம் மற்றும் ஏராளமான இணைந்த தருணங்கள்” எனக் குறிப்பிட்டு பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த புகைப்படமானது தீபாவளி கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் போல் தெரிகிறது. இந்த புகைப்படம் வெளியான சில மணி நேரங்களிலேயே ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது.

