Homeசெய்திகள்சினிமாமிகவும் எதிர்பார்க்கப்படும் தனுஷின் 'ஓம்'.... டிரெய்லர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு!

மிகவும் எதிர்பார்க்கப்படும் தனுஷின் ‘ஓம்’…. டிரெய்லர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு!

-

- Advertisement -

மிகவும் எதிர்பார்க்கப்படும் தனுஷின் ஓம் பட டிரைலர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.மிகவும் எதிர்பார்க்கப்படும் தனுஷின் 'ஓம்'.... டிரெய்லர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு!

​தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் தனுஷ், தனது அசுரத்தனமான நடிப்பால் அடுத்தடுத்து பல வெற்றிப் படங்களைக் கொடுத்து வருகிறார். அதே சமயம் ‘அமரன்’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியின் மூலம் இந்தியா முழுவதும் கவனம் ஈர்த்த இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் தான் ஓம். தனுஷ் மற்றும் ராஜ்குமார் பெரியசாமி ஆகியோரின் முதல் கூட்டணியில் உருவாகியுள்ள இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு தொடக்கம் முதலே மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. ​இந்த எதிர்பார்ப்பை மேலும் கூடுதல் படுத்தும் வகையில், இப்படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி, சாய் பல்லவி மற்றும் ஸ்ரீலீலா ஆகிய முக்கிய நடிகர்கள் இப்படத்தில் நடித்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பைப் பல மடங்கு அதிகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே இப்படத்திலிருந்து வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று சூப்பர் ஹிட் ஆகியுள்ளன.மிகவும் எதிர்பார்க்கப்படும் தனுஷின் 'ஓம்'.... டிரெய்லர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு!அடுத்தது இதன் டிரைலர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தனர். ​வரும் நவம்பர் 20-ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் டிரெய்லர் நவம்பர் 15-ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், காத்திருந்த ரசிகர்களுக்குப் பெரும் இன்ப அதிர்ச்சி தரும் விதமாக, இப்படத்தின் டிரெய்லர் நாளை (நவம்பர் 13) வெளியாக உள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

MUST READ