சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து ராஜா கருப்பசாமி பேட்டி அளித்துள்ளார்.
ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா ஆகியோரின் நடிப்பில் வெளியான ‘மொத ராத்திரி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை இயக்குனர் ராஜா கருப்பசாமி இயக்கியிருந்தார்.
மொத ராத்திரி படத்தின் வெற்றியை தொடர்ந்து, இதன் இரண்டாம் பாகமான ‘மொத ராத்திரி 2’ உருவாகும் என ராஜா கருப்பசாமி அப்டேட் கொடுத்திருந்தார்.
இந்நிலையில், இயக்குநர் ராஜா கருப்பசாமி சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது, ரஜினிகாந்தை வைத்துப் படம் இயக்கினால், அவருக்கு எந்த மாதிரியான கதாபாத்திரம் மற்றும் கதைக்களத்தைத் தேர்ந்தெடுப்பீர்கள் என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்த ராஜா கருப்பசாமி, “என் மனதில் ஒரு கதை இருக்கிறது, ரஜினி சாருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற ஆசையும் உள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு நானும் அனிஷ்மாவும் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தைப் பார்த்தோம். அதன் பிறகு என்னிடம் உள்ள அந்தக் கதை ஐடியாவை அவரிடம் சொன்னேன், அது நன்றாக இருப்பதாக அவரும் கூறினார்.
Q: If you do a film with Superstar #Rajinikanth, which character and which genre would you choose for him?
Dir #RajaKaruppasamy:
– I have a story in my mind, and I have a wish to work with Rajini sir. Two days ago, Anishma and I watched #Jailer2. Then I told her my idea, and she said it was nice.
– But right now, I cannot do it because I first want to get myself ready for it. If Rajini sir likes the story and says okay to do it, I want to be fully prepared for it. https://t.co/cIuQH06orM— Movie Tamil (@_MovieTamil) November 12, 2026

ஆனால் இப்போது என்னால் அந்தப் படத்தைச் செய்ய முடியாது, ஏனெனில் முதலில் அதற்காக என்னை நானே தயார்படுத்திக் கொள்ள வேண்டும். ரஜினி சாருக்குக் கதை பிடித்து, அவர் நடிக்க சம்மதம் தெரிவித்தால், அதற்காக நான் முழுமையாகத் தயாராக இருக்க விரும்புகிறேன்” என ராஜா கருப்பசாமி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
