- Advertisement -
ரவி மோகன் இயக்கத்தில் யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் ‘அன் ஆர்டினரி மேன்’ திரைப்படத்திலிருந்து ‘லார்டா லபக்கா’ (Larta Labakka) பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது.


ரவி மோகன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ரவி மோகன் ஸ்டுடியோஸ் சார்பில் இப்படத்தை இயக்கி தயாரித்து வருகிறார். யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் இப்படத்திற்கு கெனிஷா பிரான்சிஸ் இசையமைக்கிறார்.
ரவி மோகன் இயக்கத்தில் யோகி பாபு
‘அன் ஆர்டினரி மேன்’ திரைப்படம் மூலம் ரவி மோகன் இயக்குநராகப் புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளார். இப்படத்தில் யோகி பாபு முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தின் அறிவிப்பு மற்றும் அடுத்தடுத்த புரமோ வீடியோக்கள் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
