Homeசெய்திகள்சினிமாஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் 'கராத்தே பாபு', 'ஜீனி'.... படக்குழுவின் ரிலீஸ் பிளான் என்ன?

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் ‘கராத்தே பாபு’, ‘ஜீனி’…. படக்குழுவின் ரிலீஸ் பிளான் என்ன?

-

- Advertisement -

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் ‘கராத்தே பாபு’, ‘ஜீனி’ ஆகிய படங்களின் ரிலீஸ் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் 'கராத்தே பாபு', 'ஜீனி'.... படக்குழுவின் ரிலீஸ் பிளான் என்ன?தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருவதுடன், தற்போது தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ள நடிகர் ஜெயம் ரவி, அடுத்தடுத்த படங்களைத் தயாரிப்பதிலும் நடிப்பதிலும் படுபிஸியாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இவரது நடிப்பில் உருவாகி வரும் கராத்தே பாபு, ஜீனி ஆகிய படங்கள் குறித்த மாஸ் அப்டேட்டுகள் வெளிவந்துள்ளது.ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் 'கராத்தே பாபு', 'ஜீனி'.... படக்குழுவின் ரிலீஸ் பிளான் என்ன?

ஜெயம் ரவி நடிப்பில் கணேஷ் கே பாபு இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கராத்தே பாபு’ திரைப்படம், தணிக்கைக் குழுவின் பரிந்துரைக்கப்பட்ட சில கட்ஸ்களை வெற்றிகரமாக நிறைவு செய்து தற்போது ரிலீசுக்குத் தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது. முன்னதாக இப்படத்தை 2026 டிசம்பர் மாதத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால், தற்போது சில தவிர்க்க முடியாத காரணங்களால் 2027 காதலர் தின வாரத்தை குறிவைத்து அடுத்த ஆண்டு பிப்ரவரி 2027-ல் படத்தை வெளியிடலாம் என்று படக்குழு பரிசீலனை செய்து வருவதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், ஜெயம் ரவி நடிப்பில், அறிமுக இயக்குனர் அர்ஜுனன் இயக்கத்தில், ஐசரி கே. கணேஷின் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ஜீனி’ படத்தின் பணிகள் சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பே முழுமையாக நிறைவடைந்துவிட்டன. தற்போது ‘கராத்தே பாபு’ படத்திற்குப் பதிலாக இந்த ‘ஜீனி’ படத்தை டிசம்பர் மாத ரிலீஸ் ஸ்லாட்டிற்கு கொண்டு வருவது குறித்து படக்குழு திட்டமிட்டு வருவதாக தெரியவந்துள்ளது. ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் 'கராத்தே பாபு', 'ஜீனி'.... படக்குழுவின் ரிலீஸ் பிளான் என்ன?ஆனால் வேல்ஸ் நிறுவனம் டிசம்பர் 24-ஆம் தேதியை இலக்காகக் கொண்டு மற்றொரு பிரம்மாண்டமான உயர்-பட்ஜெட் திரைப்படத்தை வெளியிடவும் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஜெயம் ரவியின் ஜீனி திரைப்படம் வெளியாகுமா? இது தொடர்பான அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிடுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

MUST READ