இயக்குனர் சிம்புதேவனின் புதிய பட பர்ஸ்ட் லுக் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
’இம்சை அரசன் 23-ம் புலிகேசி’, ‘இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்’ போன்ற கலகலப்பான படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் இயக்குநர் சிம்புதேவன். இவர் கடைசியாக யோகி பாபு நடிப்பில் ‘போட்’ என்ற படத்தை இயக்கியிருந்தார். கடலுக்குள் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து, ஆபத்து நேரத்தில் மனிதர்களின் குணம் எப்படி மாறுகிறது என்பதை அழுத்தமாகவும், ஆழமாகவும் சொன்ன இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இதற்கு அடுத்து, சிம்புதேவன் ‘நவோரியா’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் நடிகர் விமல் ஹீரோவாக நடிக்கிறார். இது ஒரு அட்வென்ச்சர் திரைப்படமாக உருவாகி வருகிறது.
இந்தப் படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதாகவும், தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது.
மேலும் இந்த படத்தை வரும் 2026 டிசம்பர் மாதம் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளார்கள் என புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இன்று மாலை 4 மணிக்கு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகப் போகிறது. இதனை இயக்குநர்கள் வெங்கட் பிரபு மற்றும் ஏ.ஆர். முருகதாஸ் ஆகியோர் வெளியிட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் பெயர் வித்தியாசமாக இருந்தாலும், சிம்புதேவன் தான் இந்த படத்தை இயக்குகிறார் என்ற உடனேயே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
